தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
தற்போதைய நிலவரப்படி, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 158 தொகுதிகளிலும், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 76 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. வாக்கு எண்ணிக்கையின் முன்னணி நிலவரங்கள் அடிப்படையில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் எனத் தெளிவாகத் தெரிகிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, திமுக அமோக வெற்றி பெற்றுள்ளதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
Congratulations to Thiru @mkstalin and @arivalayam for the victory in the Tamil Nadu assembly elections. We shall work together for enhancing national progress, fulfilling regional aspirations and defeating the COVID-19 pandemic.
— Narendra Modi (@narendramodi) May 2, 2021
மேலும், தேர்தல் வெற்றிக்காக பாடுப்பட்ட பாஜக தொண்டர்களுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கும் அவர் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
I would like to thank the people of Tamil Nadu who supported NDA. I assure the people of Tamil Nadu that we will keep working towards the state’s welfare and to further popularise the glorious Tamil culture. I applaud our Karyakartas for their hardwork.
— Narendra Modi (@narendramodi) May 2, 2021
மேலும், கேரளாவில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ள பினராயி விஜயன், மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜீ அவர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார்.
ALSO READ | மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு பின்னடைவு- மீண்டும் ஆட்சியை தக்கவைக்கிறார் மம்தா பானர்ஜி
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR