நான் வந்தாலே சிலருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது... திமுகவை அட்டாக் செய்த பிரதமர்!

PM Modi Chennai Visit: சென்னை நந்தனத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், திமுக அரசையையும், இந்தியா கூட்டணியையும் பிரதமர் மோடி கடுமையாக தாக்கினார்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 4, 2024, 07:58 PM IST
  • 3 மாதங்களில் நான்காவது முறையாக பிரதமர் மோடி சென்னை வந்தார்.
  • உதயநிதி ஸ்டாலினின் சனாதான சர்ச்சையை மறைமுகமாக பிரதமர் தாக்கி பேசினார்.
  • நான் தமிழகம் வந்தால் சிலருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது - பிரதமர் மோடி
நான் வந்தாலே சிலருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது... திமுகவை அட்டாக் செய்த பிரதமர்! title=

PM Modi Chennai Visit: மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணியை தொடங்கியிருக்கின்றன. தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. இன்னும் சில நாள்களில் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி மற்றும் அட்டவணையை அறிவிக்க உள்ளது. 

அந்த வகையில், மத்தியில் ஆட்சியில் செய்யும் பாஜகவும் முழு முனைப்போடு தேர்தல் பணியை தொடங்கியிருக்கின்றன. குறிப்பாக, பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமற்ற தனது சூறாவளி பிரச்சார பயணத்தை தொடங்கியிருக்கிறார் எனலாம். இந்நிலையில், பிரதமர் மோடி இன்று ஒரு நாள் பயணமாக சென்னைக்கு வந்துள்ளார்.

சென்னையில் பிரதமர் மோடி

தமிழ்நாட்டுக்கு கடந்த மூன்று மாதத்தில் மட்டும் பிரதமர் மோடி நான்காவது முறையாக வந்துள்ளார். கடந்த வாரம் பல்லடம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளுக்கு பயணம் செய்த பிரதமர் மோடி இன்று தலைநகர் சென்னைக்கு வருகை தந்தார். மதியம் சென்னை விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றார். அங்கு, அதிவிரைவு ஈனுலை என்ற அணுஉலை மேம்பாடு திட்டத்தை பிரதமர் இன்று தொடங்கிவிட்டார்.

மேலும் படிக்க | ஆபத்தான ஈனுலை திட்டம்...? திறந்துவைக்கும் பிரதமர் - முதல்வர் புறக்கணிப்பு ஏன்?

அதன்பின், சென்னை விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வந்த பிரதமர் மோடி அங்கிருந்து சாலை மார்க்கமாக நந்தனம் ஒயஎம்சிஏ மைதானத்திற்கு வந்தார். அங்கு பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர். கூட்டணி கட்சித் தலைவர்களான ஜிகே வாசன், பாரிவேந்தர், ஏசி சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 

இது மோடியின் உத்தரவாதம்

இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி நீண்ட உரையை ஆற்றினார். அதன் சுருக்கத்தை இதில் காணலாம். வணக்கம் சென்னை என தனது உரையை தொடங்கிய அவர், சென்னை வெள்ள பாதிப்பின்போது திமுக அரசு சரிவர செயல்படவில்லை என குற்றஞ்சாட்டினார். அதாவது, "சில காலம் முன்புதான் சென்னையில் புயல் தாக்கி பெருவெள்ளம் ஏற்பட்டது. ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக  அரசு உதவிக்கரம் நீட்டவில்லை. மாறாக, ஊடகத்தின் உதவியால் சென்னையில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக திமுக அரசு கூறியது. 

திமுக கொள்ளையடித்த பணம் மீண்டும் மக்களுக்கே சென்று சேரும். திமுக குடும்பம் கொள்ளையடித்த பணத்தை மீட்போம்; இது மோடியின் உத்தரவாதம். மத்திய அரசின் திட்டங்களின் பலன்கள் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதால், அதனை கொள்ளையடிக்க முடியாமல் திமுக குடும்பமே சிக்கலில் உள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக செல்வதால், திமுகாவால் கொள்ளையடிக்க முடியவில்லை" என்றார். 

மேலும் படிக்க | RS Bharathi: பாஜகவினரே போதை பொருள் விற்பனையில் அதிகம் கைதானவர்கள் - ஆர் எஸ் பாரதி

போதைப் பொருள் புழக்கம்

தமிழ்நாட்டில் போதைப்பொருள் தங்குத்தடையின்றி கிடைக்கிறது எனவும் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார். தமிழகத்தில் குழந்தைகளின் நலன் பாதிக்கும் வகையில், போதைப் பொருள் புழக்கத்தில் இருப்பதாக பிரதமர் கூறினார். பாஜகவை தமிழக மக்கள் ஆதரளிக்கும்பட்சத்தில் போதை பொருள் ஒழிக்கப்படுவதற்கு உத்தரவாதம் தரப்படும் என்றும் கூறினார். 

மேலும், சென்னை மெட்ரோ, விமானநிலையம் உள்ளிட்ட விஷயங்களில் மத்திய அரசு கவனம் செலுத்தியதாகவும், சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான பாதையை உருவாக்குவதில் முனைப்பு காட்டி வருவதாகவும் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார். 

உதயநிதி மீது தாக்கு 

பல மின்சார திட்டங்களை தனது ஆட்சியில் தொடங்கியிருப்பதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவின் 18,000 கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் இருட்டில் வாழ்ந்ததாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார். திமுக அரசின் மீது அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டிய அவர், தான் தமிழ்நாட்டுக்கு வரும் போதல்லாம் சிலருக்கு வயிற்று வலி ஏற்படுவதாகவும், வயிற்றில் புளியை கரைப்பதாகவும் கூறினார். 

இந்தியா கூட்டணி ஊழல் கூட்டணி. கொள்ளையடிப்பதே அந்த கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளின் முக்கிய நோக்கம், இந்தியா கூட்டணியால் இளைஞர்கள் அரசியலில் இரு்து ஒதுங்கி நிற்கின்றனர். குடும்ப அரசியலால் பதவி பெற்ற ஒருவர் ஆவணமாக பேசி வருகிறார்" என உதயநிதி ஸ்டாலினின் சனாதான சர்ச்சையை மறைமுகமாக பிரதமர் தாக்கினார்.

மேலும் படிக்க | பிரதமர் இந்த காரணத்திற்காக தான் தமிழகம் வருகிறார் - முதல்வர் ஸ்டாலின்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News