கோயம்புத்தூரில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக மக்கள் வாக்களித்தது வருகின்றனர். மேலும், சேகரிக்கத்த வாக்குகளை முதலமைச்சருக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பஸ் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டதை கண்டித்து நேற்று 2-வது நாளாக பல இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவர்களும் இந்தஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால், தமிழகம் பரபரப்பாக காட்சியளிகிறது.
சென்னை செங்குன்றத்தை அடுத்த காந்திநகரில் இந்திய மாணவர் சங்கமும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதுகுறித்து பயணிகள் சிலர் கூறுகையில், “பஸ் கட்டணம் எங்களை மலைக்க வைப்பதாக உள்ளது. உதாரணமாக 5 பேர் உள்ள ஒரு குடும்பத்துக்கு ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை கூடுதலாக செலவாகிறது. இது நடுத்தர குடும்பத்துக்கு பெரிய சிக்கல் தான்.
அணு உலை, விவசாயிகள் போராட்டம், ஜல்லி கட்டு உள்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு மாணவர்கள் தாமாக வந்து போராட்டம் நடத்தியதால் அவற்றின் தடையும், பிரச்சனையும் முடிந்தது. அதே போன்று பஸ் கட்டண உயர்வு, குறித்தும் மாணவர்கள், குரல் குடுத்து வருகின்றனர்.
அரசு பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. பொதுமக்கள் மட்டுமல்லாமல் அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் குதிக்கின்றன. இதன்படி, இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. வரும் 27-ம் தேதி திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.
குமரி மாவட்டம் தக்கலை, ஈரோடு மாவட்டம் கோபி ஆகிய இடங்களில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் சத்தியமங்கலத்தில் மறியலில் ஈடுபட்ட அக்கட்சியினர் 37 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினரும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பா.ஜனதா சார்பிலும், பரமத்திவேலூரில் தமிழ்புலிகள் கட்சி சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதை தொடர்ந்து, கோயம்புத்தூரில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக மக்கள் வாக்களித்தது வருகின்றனர். அவர்கள் சேகரிக்கப்பட்ட வாக்குகளை முதலமைச்சருக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் தகவல் தெரிவித்து வருகின்றனர்.
Tamil Nadu: People cast their vote against bus fare hike in Coimbatore demanding a rollback of the fare hike decision. The collected votes will be sent to the Chief Minister. pic.twitter.com/wv34ISwtiA
— ANI (@ANI) January 22, 2018