வீச்சு அரிவாளுடன் கொள்ளையடிக்க வரும் கொலைகார கும்பல்! பீதியில் நாமக்கல் மக்கள்

நாமக்கல் அருகே வீச்சு அரிவாளுடன் வீடுகளில் வலம் வரும் கொள்ளையர்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 27, 2022, 06:07 PM IST
  • அச்சுறுத்தும் முகமூடி கொள்ளையர்கள்
  • நாமக்கல் மாவட்ட மக்கள் பீதி
  • காவல்துறையினர் தீவிர விசாரணை
வீச்சு அரிவாளுடன் கொள்ளையடிக்க வரும் கொலைகார கும்பல்! பீதியில் நாமக்கல் மக்கள்  title=

நாமக்கல் நகராட்சி 3-வது வார்டு பகுதியான சாய் நகர், பிருந்தா நகர் பகுதியில் நேற்று நள்ளிரவில்  கொள்ளையர்கள் இருவர் வீச்சு அரிவாளுடன் அப்பகுதிகளில் உள்ள வீடுகளின் ஜன்னல் மற்றும் கண்ணாடிகளை உடைத்து திருட முயற்சித்துள்ளனர். திருடர்களை கண்ட அப்பகுதி பொதுமக்கள் சத்தம் போட்டதை அடுத்து கொள்ளையர்கள், அங்கிருந்து தப்பியுள்ளனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 மேலும் படிக்க | டி ஷர்ட், பேண்ட்டுடன் மனித எலும்புக்கூடு - கூடுவாஞ்சேரியில் அலறிய மக்கள்

அந்த காட்சிகளில் இரண்டு திருடர்கள் அரை நிர்வாணத்துடன் முகமூடி அணிந்தவாறு கையில் வீச்சு அரிவாளுடன் வீடுகளின் ஜன்னல் வழியாக திருட முயற்சித்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 13-ம் தேதி நாமக்கல் போதுபட்டி அடுத்துள்ள சரவணநகர், லட்சுமி நகர் போன்ற பகுதிகளில் இதே திருடர்கள் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்களிடம் நகையை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். 

இதன் பிறகு  நேற்று சாய் நகர், பிருந்தா நகர்களில் கொள்ளை முயற்சியானது நடந்துள்ளது. தொடர்ந்து முகமூடி அணிந்து கையில் பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையில் ஈடுபட்டு நபர்களால் நாமக்கல் நகரவாசிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே, போலீசார் விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் படிக்க | தற்கொலைக்கு ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News