சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். உடலை கைப்பற்றி கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இறந்து கிடந்தவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த உன்னி கிருஷ்ணன் என்பவர் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் இஸ்ரோவில் (ISRO) பணிபுரியும் ரகு என்பவரின் மகன் என்பதும், வேளச்சேரியில் தங்கி ஐஐடி (IIT Madras) மாணவர்களுக்கு புராஜெக்ட் வேலைகளை செய்து கொடுத்து வந்ததும் தெரியவந்தது.
ALSO READ | சுகாதாரப் பணியாளர்களுக்காக Nano Filter-ஐ உருவாக்கிய IIT-Madras ஆராய்ச்சியாளர்கள்
இதையடுத்து அவரின் அறைக்குச் சென்ற அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில் 11 பக்கம் கொண்ட தற்கொலை கடிதம் கிடைத்தது அதில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக அவர் எழுதி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவருடன் தங்கி வரும் கேரளாவைச் சேர்ந்த அனில்குமார், சேலத்தைச் சேர்ந்த பிரகாஷ் ஆகியோரிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக சென்னை ஐ.ஐ.டியில் சில மாணவர்கள் தற்கொலைகள் செய்து கொண்டுள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவி பாத்திமா லத்தீப் மரணம் நாட்டையே உலுக்கியது. அதேபோன்று தற்போதும் ஒரு மாணவர் தற்கொலை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ALSO READ | தேசிய நிறுவன தரவரிசை (NIRF) பட்டியலில் IIT-மெட்ராஸுக்கு முதலிடம்...
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR