இன்னும் மாணவியின் உடலை பெற்றோர் பெற்று கொள்ளவில்லை -தமிழக அரசு

Kallakurichi Incident: நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் மாணவியின் உடலை பெற்றோர் பெற்று கொள்ளவில்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 21, 2022, 03:13 PM IST
  • மறு உடற்கூராய்வு செய்யப்பட்ட மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுப்பு
  • கள்ளக்குறிச்சி மாணவி உடலை வாங்க உத்தரவிடக் கோரும் வழக்கு ஒத்திவைப்பு
  • ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் மறு பரிசீலினை செய்ய போவதில்லை -நீதிமன்றம்
இன்னும் மாணவியின் உடலை பெற்றோர் பெற்று கொள்ளவில்லை -தமிழக அரசு title=

கள்ளக்குறிச்சி: சின்ன சேலம் மாணவி மரணமடைந்ததை அடுத்து, அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் 3 அரசு மருத்துவர்கள் மற்றும் 1 ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மறு உடற்கூராய்வு நடத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டிருந்தார். தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்ததையடுத்து இன்று காலை வழக்கு திரும்பப் பெறப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்ற தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா முறையீடு செய்தார் . அப்போது மறு உடற்கூராய்வு செய்யப்பட்ட மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுப்பதாகவும், உடலை வாங்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து, அவசரம் கருதி விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்ற நீதிபதி சதீஷ்குமார் இன்று மதியம் 2:15 மணிக்கு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ஒப்புதல் தெரிவித்ததுடன், அப்போது மாணவியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகவும் உத்தரவிட்டார்.  இதனையடுத்து சின்ன சேலம் பள்ளி மாணவி உடலை வாங்க பெற்றோருக்கு உத்தரவிடக்கோரிய அரசின் முறையீட்டை இன்று மதியம் சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. 

மேலும் படிக்க: கள்ளக்குறிச்சி மாணவி இறந்த பள்ளியின் விடுதி குறித்து வெளியான சம்பவம்

அப்பொழுது நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் உடலை பெற்றோர் பெற்று கொள்ளவில்லை என தமிழக அரசு சார்பில் முறையிடப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராமலிங்கம் தரப்பு, நீதிமன்ற உத்தரவை மீறி மறு பிரேத பரிசோதனையின் போது பெற்றோர் மற்றும் எங்கள் தரப்பு வழக்கறிஞர் இல்லாமலேயே நடத்தி விட்டனர் என்றார்.

அனைத்து நடைமுறைகளும் நீதிமன்ற உத்தரவுப்படி தான் நடைபெற்றது. ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கை வாபஸ் பெற்று விட்டனர் என அரசு தரப்பு கூறியது. அதற்கு பதில் அளித்த ராமலிங்கம் தரப்பு, நாங்கள் கூறும் மருத்துவர்கள் கொண்டு மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தோம். தேவைப்பட்டால் உயர் நீதிமன்றத்தை அனுகலாம் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. எனவே இந்த வழக்கை முடிக்க கூடாது எனக் கூறினார்.

நாளை நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்யுங்கள். நாளை காலை 10:30 விசாரிக்கிறேன் என நீதிபதி தெரிவித்தார். அதேநேரத்தில் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் மறு பரிசீலினை செய்ய போவதில்லை என்பதையும் நீதிபதி உறுதிப்படுத்தினார்.

மேலும் படிக்க: கள்ளக்குறிச்சி மாணவியின் சிசிடிவி காட்சி வெளியானது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News