சாதாரண காய்ச்சல் Paracetamol மாத்திரைக்கு மருத்துவரின் பரிந்துரை அவசியமில்லை: TN Govt

மருத்து கடைகளில்  பாராசிட்டமால் மாத்திரையை வழங்க மருத்துவர்களின் பரிந்துரை தேவையில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 14, 2020, 04:58 PM IST
சாதாரண காய்ச்சல் Paracetamol மாத்திரைக்கு மருத்துவரின் பரிந்துரை அவசியமில்லை: TN Govt title=

சென்னை: பாராசிட்டமால் (Paracetamol) மாத்திரை வாங்குவது குறித்து தமிழக அரசு (TN Govt) விளக்கம் அளித்துள்ளது. அதாவது மருத்து கடைகளில்  பாராசிட்டமால் மாத்திரையை வழங்க மருத்துவர்களின் பரிந்துரை தேவையில்லை என்று தெரிவித்துள்ளது. இனி மருந்தகங்களில் உங்களுக்கு தேவைப்படும் போது பாராசிட்டமால் மாத்திரையை வாங்கிக்கொள்ளலாம். 

முன்னதாக, பாராசிட்டமால் மாத்திரையை (Acetaminophen) உட்கொள்வதால், உடலின் வெப்பநிலையை குறைகிறது. இதனால் மாநிலத்திற்கு வெளியில் இருந்து வருபவர்களிடம் சோதனை மேற்கொள்ளும் போது வெப்பநிலை குறைந்த அளவில் காட்டுகிறது. இதனால் கொரோனா தொற்று பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. 

READ ALSO | சென்னையில் 16 லட்சம் மதிப்புள்ள ‘Frosch’ மற்றும் ‘Lamborghini’ போதை மாத்திரை பறிமுதல்

இதனையடுத்து மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் பாராசிட்டமால் மாத்திரையை விற்பனை கிடையாது என பல மருந்தகங்கள் (Medical Stores) தெரிவித்தன. இதனால் சாதாரண காய்ச்சலுக்கும் பாராசிட்டமால் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டது. 

இதனை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்ற (Madras High Court Madurai Bench) கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைபின் போது, தமிழக அரசு (TN Govt) சார்பில், மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் பாராசிட்டமால்  மாத்திரை வழங்கக் கூடாது என்று அரசு தரப்பில் எந்தவித உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. அதே சமயம், மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமலும் பொதுமக்கள் மருந்தகங்களில் பாராசிட்டமால் மாத்திரையை வாங்கிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தது.

Trending News