உதகை அருகே கூடலூரில் பிரசாரத்திற்காக வந்த துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் துணை முதல் மந்திரி ஓ. பன்னீர் செல்வம் இன்று உதகையில் தனது பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக அவரது வாகனம் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது நடுவட்டம் பகுதியில் சென்றபோது திடீரெனகட்டுப்பாட்டினை இழந்த வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஓட்டுனர் மற்றும் உதவியாளருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது