கிடு கிடுவென உயரும் வெங்காயத்தின் விலை! அதிருப்தியில் வியாபாரிகள்

வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மதுரையில் 1 கிலோ வெங்காயத்தின் விலை ரூ.120-180 ஐ நெருங்கி உள்ளது. 

Last Updated : Dec 5, 2019, 12:21 PM IST
கிடு கிடுவென உயரும் வெங்காயத்தின் விலை! அதிருப்தியில் வியாபாரிகள் title=

வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மதுரையில் 1 கிலோ வெங்காயத்தின் விலை ரூ.120-180 ஐ நெருங்கி உள்ளது. 

சுவை கூட்டும் காய்கறியாக சாப்பாட்டு வகைகளில் வெங்காயம் சேர்க்கப்படுகிறது. தற்போது இந்த வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. விலை ஏற்றம் அடைந்துள்ளதால் சில ஓட்டல்களில் வெங்காயத்தை அதிகமாக சேர்த்து செய்யப்படும் உணவு வகைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் லாரி லாரியாக தமிழகத்திற்கு வெங்காயம் வரவழைக்கப்படுகிறது. மழையின் காரணமாக வட மாநிலங்களில் வெங்காயம் விளைச்சல் பாதியாக குறைந்து விட்டதால் கடந்த 4 மாதங்களில் வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வியாபாரம் சற்று மந்தமாகவே உள்ளது. பொதுமக்கள் வழக்கத்தை விட குறைந்த அளவே வெங்காயம் வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் தற்போது மதுரையில் 1 கிலோ வெங்காயத்தின் விலை ரூ.120-180 ஐ நெருங்கி உள்ளது. இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், வெங்காயத்தின் விலை அதிகரிப்பால் 5 கிலோ வாக வாங்கிய வாடிக்கையாளர்கள் தற்போது  2 கிலோ மட்டுமே வாங்குகிறார்கள். நல்ல தரமான வெங்காயத்தை நாங்கள் கிலோ ரூ .180 க்கு விற்பனை செய்கிறோம். மேலும் குறைந்த தரமான வெங்காயத்தை ரூ . 120-130 கிலோவிற்கு விற்பனை செய்கிறோம்.

 

 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

 

Trending News