மக்களவை தேர்தலில் DMK கூட்டணியில் KMD-க்கு 1 தொகுதி ஒதுக்கீடு!!

அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் ஈஸ்வரன் இடையே தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து

Last Updated : Feb 26, 2019, 12:10 PM IST
மக்களவை தேர்தலில் DMK கூட்டணியில் KMD-க்கு 1 தொகுதி ஒதுக்கீடு!! title=

அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் ஈஸ்வரன் இடையே தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள்தேசிய கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு.... 

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழக தேர்தல் களம் பரபரப்பாகி வருகிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவும் பாமகவும் இணைந்த நிலையில் தேமுதிக இணைவது குறித்து இன்னும் முடிவாகவில்லை. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும் பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டு அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக கடந்த 20 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. காங்கிரசுக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு குறித்து மற்ற தோழமைக் கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்தநிலையில், இன்று திமுக மற்றும் ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள்தேசிய கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் ஈஸ்வரன் இடையே தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்திடப்பது. இதுகுறித்து திமுக கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெறவுள்ள 17 வது நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முநேற்றக்ககழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் - ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள்தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அவர்களுக்கும், இன்று (26-2-2019) தொகுதி உடன்பாடு குறித்து கலந்து பேசி, 1 தொகுதியை கொங்குநாடு மக்கள்தேசிய கட்சி பங்கிட்டுக் கொள்வதெனவும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. 

இந்த  பேச்சு வார்த்தையின்போது, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பேரவைத்தலைவர் ஆர்.தேவராஜ் - கழகப் பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, கழக துணைப் பொதுச்செயலாளர் இ.பெரியசாமி, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு, விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் எ.வ.வேலு. கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.இராசா மற்றும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் முன்னணித் தலைவர்கள் உடனிருந்துள்ளனர். 

 

Trending News