ஈரோட்டில் பிரச்சாரம் செய்வீர்களா? ஓபிஎஸ் சொன்ன சுவாரஸ்ய பதில்!

முறையாக அறிவிப்பு செய்த பின்னர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரத்திற்கு செல்வேன் என ஓபிஎஸ் சென்னையில் கூறினார்.    

Written by - RK Spark | Last Updated : Feb 7, 2023, 12:27 PM IST
  • ஓபிஎஸ் ம்- இபிஎஸ்ஸும் எப்போது வேண்டுமானாலும் சந்தித்துக் கொள்ளலாம்.
  • ஈரோடு தொகுதியில் இரட்டை இலைக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவோம்.
  • மாப்பிள்ளை செங்கோட்டையனுக்கு திறந்த மனது - கு.ப.கிருஷ்ணன் பேட்டி
ஈரோட்டில் பிரச்சாரம் செய்வீர்களா? ஓபிஎஸ் சொன்ன சுவாரஸ்ய பதில்! title=

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தேனி செல்வதற்காக புறப்பட்ட ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்வீர்களா? என்ற செய்தியாளர் கேள்விக்கு, கண்டிப்பாக எல்லோரிடமும் சொல்லிவிட்டு தான் பிரச்சாரத்திற்கு செல்வேன் என்று கூறினார்.  ஓபிஎஸ் அவரது வீட்டில் இருந்து புறப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக கு.ப.கிருஷ்ணன் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகனுடன் ஓபிஎஸ்ஐ சந்தித்தார்.

மேலும் படிக்க: ஈரோடு இடைத்தேர்தலில் ஒற்றை அணியாக திமுகவை எதிர்ப்போம்!

ஓபிஎஸ்-ஐ சந்தித்தபின் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஓபிஎஸ் சரப்பு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் செய்தியாளர்களிடம் பேசியது,  தலைமை முடிவெடுத்து ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் என்னை போட்டியிடச் சொன்னார்கள், அதனால் வேற்றுமை தாக்கல் செய்திருந்தேன். தற்போது தலைமை என்னை வாபஸ் பெற சொல்கிறார்கள், தலைமையின் முடிவிற்கு நான் நிச்சயம் கட்டுப்படுவேன். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற பாடுபடுவேன் என தெரிவித்தார்.

கு.ப.கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியது, ஈரோடு கிழக்கு  சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும் திமுகவை எதிர்த்து நிற்கிறோம். அவரவர் பாணியில் அவரவர்கள் இரட்டை இலைக்காக பிரச்சாரம் செய்வோம்.  இரட்டை இலை சின்னம் இபிஎஸ் தரப்புக்கு போனதால் எந்த பின்னடைவும் இல்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக மட்டுமே உச்சநீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கி  இருக்கிறது.இரட்டை இலை சின்னத்தின் வெற்றிக்காக பரப்புரை செய்வோம் என்றார்.  மேலும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டைன் ஓ பன்னீர்செல்வத்தை பாராட்டியது தொடர்பாக பேசிய குப கிருஷ்ணன், செங்கோட்டையன் மாப்பிள்ளைக்கு ரொம்ப நன்றி அவருக்கு திறந்த மனசு இருக்கிறது என தெரிவித்தார்.  எடப்பாடி பழனிச்சாமியை ஒ.பி.எஸ் சந்திப்பாரா என்ற கேள்விக்கு எதுவும் நடக்கலாம் என பதிலளித்த கு.ப கிருஷ்ணன் நாங்கள் எப்போதும் தோல்வியை கண்டு துவண்டு போவதும் இல்லை மகிழ்ச்சியை கண்டு பூரித்துப் போறவர்களும் இல்லை என கூறினார்.

மேலும் படிக்க: அதிமுக வேட்பாளரை முடிவு செய்வது யார்? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News