சென்னை: ஜனவரி 27 ம் தேதி வி.கே. சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகவுள்ள நிலையில், இதைச் சுற்றி பல ஊகங்களும் வதந்திகளும் பரவி வருகின்றன. இந்த நிலையில் சசிகலாவின் ஆதரவாளர்கள் பரப்பி வரும் செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில், முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் செவ்வாயன்று முன்னாள் முதல்வர் எம்.ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கண்டிப்பாக மீண்டும் கட்சிக்குள் வரமாட்டார் என வலியுறுத்தினார். மேலும், சசிகலா விடுதலையாகும் நாளன்று ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைப்பதாகவும் மாநில அரசு அறிவித்துள்ளது.
“அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை. அவர் கட்சியின் ஒரு அங்கம் அல்ல என்பது எனக்கு 100% உறுதியாகத் தெரியும்” என்று பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்புக்குப் பின்னர் டெல்லியில் ஊடகங்களிடம் உரையாற்றிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி (Edappadi K Palaniswami) கூறினார்.
முன்னதாக, தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியுடன் (PM Modi) அவரது இல்லத்தில் 30 நிமிடங்கள் உரையாடினார். மேலும் திங்கள்கிழமை மாலை உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் முதல்வர் பழனிசாமி சந்தித்தார். “மாநிலத்தின் வளர்ச்சி குறித்து விவாதிக்க நான் இங்கு வந்தேன். தேர்தலுக்கு இன்னும் நேரம் உள்ளது. தொகுதி பகிர்வு மற்றும் பிற பிரச்சினைகள் பின்னர் விவாதிக்கப்படும்” என்று அவர் தெளிவுபடுத்தினார்.
ஏ.எம்.எம்.கே-வின் வருங்காலம் மற்றும் அதன் தலைவர் டி.டி.வி தினகரன் (TTV Dinakaran) பற்றியும் அவர் அதிமுகவில் சேர்க்கப்படுவாரா என்பது பற்றியும் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பெரும்பாலான ஏ.எம்.எம்.கே தொண்டர்கள் ஏற்கனவே தங்கள் கட்சியில் சேர்ந்துவிட்டதாக கூறினார். “தினகரன் மட்டுமே ஏ.எம்.எம்.கே.-வில் தற்போது உள்ளார். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவர் அதிமுகவின் ஒரு பகுதியாக இருக்கவில்லை. எதிர்காலத்திலும் அவர் சேர்க்கப்பட மாட்டார்” என்று பழனிசாமி கூறினார்.
ALSO READ: கொரோனா தடுப்பூசியை போடும் டாக்டர் alias அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர்கள் உட்பட பல மூத்த தலைவர்கள், சசிகலாவை (Sasikala) மீண்டும் அதிமுகவுக்குள் கொண்டுவருவதற்கு பகிரங்கமாக குரல் கொடுத்து வரும் நிலையில், காமராஜர் தெருவில் கட்டப்பட்ட ஜெயலலிதாவின் நினைவுச் சின்னம் ஜனவரி 27 அன்று திறக்கப்படும் என செவ்வாய்க்கிழமை மாலை மாநில அரசு தெரிவித்தது. அன்றுதான் சசிகலா சிறையில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.ஜெயலலிதாவின் (J Jayalalitha) சிலை திறப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியால் அரசியல் மற்றும் சமூக ஊடகங்களில் விவாதம் கிளம்பியுள்ளது. சசிகலா விடுதலையாகும் செய்தியை ஓரங்கட்டவே இந்த தேதி தேர்ந்தெடுக்கப்பட்டதா என்ற கேள்வி பலரது மனங்களில் உள்ளது. ரூ .80 கோடி செலவில் ‘ஃபோனிக்ஸ்’ என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள இந்த நினைவுச்சின்னம் 50,422 சதுர அடி வரை பரவியுள்ளது.
இந்த நினைவுச்சின்னத்தில் மறைந்த முதல்வருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நூலகமும் உள்ளது. அங்கு அவரது பழைய புகைப்படங்கள் மற்றும் புத்தகங்கள் வைக்கப்படும்.
ALSO READ: பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும்: PMK
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR