நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு எதிராக சட்டத்திற்கு உட்பட்டே நடவடிக்கை எடுப்போம் என்றும், கட்சி தரப்பில் ஆஜராக கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது. துப்பாக்கி தயாரிப்பது குறித்து யூ டியூபில் வீடியோ வெளியிட்டதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இரு பொறியியல் பட்டதாரிகள் மீது, தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்தது.
சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கின் அடிப்படையில், தேசிய புலனாய்வு முகமை, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தியது.
இந்நிலையில், தேசிய புலனாய்வு முகமை அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி நாம் தமிழர் கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் இடும்பவனம் கார்த்திக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மேலும் படிக்க | கன்னியாகுமரியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை..! காவல்துறை விசாரணை!
அந்த மனுவில், எதிர்வரும் மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சியை முடக்கும் வகையிலும், கட்சியினருக்கும், அனுதாபிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய புலனாய்வு முகமையின் விசார்ணைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட அனைவரும் தயாராக இருப்பதாகவும், அதற்கு உரிய கால அவகாசத்தை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்புக்கும், சட்டம் ஒழுங்குக்கும் ஊறுவிளைவிக்கும் வகையில், நாம் தமிழர் கட்சியினர் எந்த தேசவிரோத, சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டதில்லை என்பதால், தேசிய புலனாய்வு முகமை அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரியுள்ளார்.
இந்த வழக்கு அவசர வழக்காக நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ், நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மேலும் படிக்க | விஜய் செய்து காட்டினார்! ரஜினி, கமல் செய்தார்களா? விஜய் ஆதரவாக பேசும் அதிமுக!
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சங்கர், சேவியர் பிலிக்ஸ் ஆகியோர், கட்சி நிர்வாகிகளுக்கு காலையில் சம்மன் அளித்துவிட்டு உடனடியாக அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள், வெளியூரில் உள்ள நிர்வாகிகளுக்கும் காலையில் சம்மன் அனுப்பி சென்னையில் இன்றே ஆஜராக வேண்டும் என்று கூறுகிறார்கள், இது சட்ட விதி மீறல் என்றும் தெரிவித்தனர்.
சில இடங்களில் சோதனையும் நடத்தியதால் சம்மன்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சித் தரப்பில் நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில், என்ஐஏ சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், கால அவகாசம் தந்துள்ளதாக தெரிவித்தார்.
மனுதாரர் திங்கள்கிழமை 5-ம் தேதி ஆஜராக அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதை ஏற்றுக்கொள்கிறோம், அவர் 5 ஆம் தேதி ஆஜராகலாம் என்று தெரிவித்துள்ளோம், கைது நடவடிக்கை ஏதும் இருக்காது, சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்போம் என்று என்ஐஏ சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
மேலும் படிக்க | ராமேஸ்வரத்தில் புனித நீராடிய பிரதமர் மோடி - புகைப்படங்கள் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ