மகளிர் தினத்தன்று யோகாவில் புதிய சாதனை!

இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்ஸில் சென்னை மீனாட்சி கல்லூரியை சேர்ந்த மாணவி பிரியதர்ஷினி இடம்பிடித்துள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 9, 2022, 01:52 PM IST
  • யோகாவில் சாதனை படைத்த மாணவி.
  • ஏக பாத ராஜகபோதாசனம் என்னும் யோகாசன நிலையில் 60 நிமிடங்கள் இருந்து சாதனை.
  • இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
மகளிர் தினத்தன்று யோகாவில் புதிய சாதனை! title=

மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் வணிகவியல் துறை மாணவியான செல்வி. சே. பிரியதர்ஷினி, யோகாவில் ஆசிய அளவில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.  கடற்கன்னி வடிவில் அமர்ந்து செய்யப்படும் ஏக பாத ராஜகபோதாசனம் என்னும் யோகாசன நிலையில் தொடர்ந்து 60 நிமிடங்கள் இருந்ததன் மூலம் பிரியதர்ஷினி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.  ஏக பாத ராஜகபோதாசனம் என்கிற இந்த ஆசன நிலையில், கடந்த ஆகஸ்ட் 15, 2021 ஆம் ஆண்டில் நந்தினி சார்தா 57 நிமிடங்கள் 58 வினாடிகள் கால அளவில் அமர்ந்து நிகழ்த்தியதே முந்தய சாதனையாக இருந்தது. அதனை தொடர்ந்து, மாணவி பிரியதர்ஷினி முழுமையாக 60 நிமிடங்கள் அந்த ஆசன நிலையில் அமர்ந்து நீடித்ததன் மூலம் இப்புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.  

மேலும் படிக்க | மகளிர் தினம் 2022: பெண்கள் போராட்டம் பெண்கள் தின கொண்டாட்டம் ஆன கதை!

08.03.2022 அன்று மகளிர் தினத்தையொட்டி, மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி அரங்கத்தில் இந்தச் சாதனை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆய்வு நிலையத்தின் வேந்தரான திரு. ஏ. என். ராதாகிருஷ்ணன், கல்லூரி தலைவரான திருமதி. ஜெயந்தி ராதாகிருஷ்ணன், துணைவேந்தர் முனைவர் ஆர்.எஸ்.நீலகண்டன், பதிவாளர் முனைவர் சி. கிருத்திகா, மீனாட்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வி.சாந்தி ஆகியோருடன், இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் தீர்ப்பு நடுவர் முன்னிலையில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. 

yoga

யோகரத்னா சரஸ்வதி அவர்களிடம் 3 ஆண்டுகளாக சிரத்தையுடன் யோகா பயின்று வந்தவர் பிரியதர்ஷினி.  தன் ஆசிரியர் போல, அவரும் யோகரத்னா பட்டம் பெற்றவர். தற்போது மீனாட்சி கல்லூரியில் மூன்றாமாண்டு வணிகவியல் பயின்று வரும் அவர் படிப்பிலும் சிறந்த மாணவியாக திகழ்ந்து வருகிறார். தம் கல்லாரி முதல்வர் முனைவர் சாந்தி, துறைத் தலைவர் முனைவர் ச.மலர்விழி ஆகியோர் அளித்த ஊக்கமும் மெகர் பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கிய நன்கொடை மற்றும் அனைத்து வகை உதவிகளும் உற்சாகமுமே இந்த சாதனையை நிகழ்த்த காரணமாக அமைந்தது என்று கூறும் பிரியதர்ஷினி, இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த கல்லூரி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தார். யோகா ஆசிரியர் சரஸ்வதி, தன் தந்தை சேகர், தாய் அனிதா ஆகியோர் இச்சாதனையை நிகழ்த்துவதற்கு தூண்டுகோலாக இருந்தார் என்றும்  பிரியதர்ஷினி கூறியுள்ளார்.

மேலும் படிக்க | உண்மையான மகளிர் தினம் எது தெரியுமா? ஒரு பெண்ணின் கடிதம்..

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News