காலமானார் ’தமிழ்கடல்’ நெல்லை கண்ணன்

தமிழ்கடல் நெல்லை கண்ணன் வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 78  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 18, 2022, 02:26 PM IST
  • நெல்லைக் கண்ணன் காலமானார்
  • மூத்த அரசியல்வாதிகளுடன் நெருக்கம்
  • அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல்
காலமானார் ’தமிழ்கடல்’ நெல்லை கண்ணன் title=

இலக்கியவாதியும்,பிரபல பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் காலமானார். தமிழ்நாட்டு முக்கிய தலைவர்களாக, ஆளுமைகளாக, பிரமுகர்களாக இருந்தவர்களிடம் நெருங்கிப் பழகியவர். முன்னாள் முதல்வர் காமராஜர்,கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டோருடன் நட்பாய் இருந்தவர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த ஜி.கே.மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, கே.வி.தங்கபாலு ஆகியோருடன் நெருக்கமான நட்பு கொண்டவர்.  1992 ஆம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினர் தேர்தலின்போது வேட்பாளராக ஜெயந்தி நடராஜன் மற்றும் இவரது பெயரும் தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அப்போதும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

மேலும் படிக்க | இணைந்து சேயல்படுவோம் : எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்த ஓபிஎஸ்

2001-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தன்னை அ.தி.மு.கவில் இணைத்துக் கொண்டார். ஜெயலலிதா இவருக்கு ஒரு கார் பரிசளித்த தாகவும் கூறப்பட்டது. ஆனால் அவரால் அ.தி.மு.கவில் நீண்டநாட்கள் நீடிக்க முடியவில்லை. ஓர் ஆண்டு இடைவெளியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினார். அரசியலில் மிகப் பெரிய பதவிக்கு அவரால் வர முடியவில்லை.

தொடர்ந்து இலக்கிய சமய சொற்பொழிவு ஆற்றி வந்த அவர், தனியார் தொலைக்காட்சி நடத்திய பேச்சாளர்களை உருவாக்கும் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டார். 75 வயதை கடந்த நிலையிலும் பேச்சாற்றலும் நினைவாற்றலும் இவரது பேச்சு இலக்கிய நயமும் சிறப்பாக இருந்தது. அவருடைய மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள், இலக்கிய மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.  நெல்லைக்கண்ணன் மறைவு குறித்து பேசிய அவரது மனைவி, தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், நெல்லை கண்ணன் எழுதிய அனைத்து புத்தகங்களையும் நாட்டுடமையாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். 

மேலும் படிக்க | ஓபிஎஸ்ஸூக்கு எதிராக மேல்முறையீடு; எடப்பாடி போடும் கணக்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News