'நீட்' தேர்வினால் உயிர் இழந்த இளம்பெண் அனிதா தற்கொலை பற்றி 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
NEET aspirant #Anitha's suicide case: Supreme Court asks Tamil Nadu Chief Secretary to file an affidavit within two weeks.
— ANI (@ANI) September 18, 2017
நீட் தேர்வினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடிய மாணவி அனிதா கடந்த செப்டம்பர் 1-ம் தேதி அன்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் 12-ம் வகுப்பில் 1,176 எடுத்துள்ளார். இவரது மருத்துவ 'கட்ஆப்' 196.75 பெற்றார். எனினும் நீட் தேர்வில் இவரால் 700க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடந்தால் இவருக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. இதனால் மனமுடைந்த அனித்தா தனது வீட்டினில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவரது தற்கொலைக்கு பிறகு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர். மேலும் அனிதா மரணத்திற்கு நீதிகேட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அனிதா மரணத்திற்கு நீதிகேட்டு கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து போராட்டம் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.