சென்னை: நாட்டில் கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்றுநோய் கட்டுக்குள் வரும் வரை Neet மற்றும் JEE தேர்வைகளை ஒத்திவைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (M.K. Stalin) கோரிக்கை வைத்துள்ளார். அதுக்குறித்து மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
நீட் மற்றும் ஜே.இ.இ உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை நாடு முழுவதும் எழுந்து வருகிறது. 4,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்டை மேற்கொண்டுள்ளனர். கோவிட் -19 தொற்றை கருத்தில் கொண்டு கோரிக்கையை வலியுறுத்தினர்.
ALSO READ | NEET, JEE தேர்வுகளை ஒத்திவைக்க பிரதமர் கல்வி அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேண்டும்: சுவாமி
முன்னதாக, தேசிய தேர்வு முகமை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும், ஜேஇஇ முதன்மை தேர்வு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை அடுத்து, Neet மற்றும் JEE தேர்வைகளை ஒத்திவைக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரணைக்கு வந்த போது, அனைத்து மனுகையும் உச்ச நீதிமன்றம், தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து, மத்திய அரசு திட்டமிட்டப்படி, நீட் மற்றும் ஜே.இ.இ உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறும் என அறிவித்தது. இதற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததோடு, மாணவர்களின் நலன் கருதி, நீட் தேர்வை இன்னும் சில காலம் ஒத்திவைக்க வேண்டும் எனக்கோரிக்கை வைத்தனர்.
இந்தநிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தரப்பில் எழுதப்பட்ட கடிதத்தில், "கொரோனா வைரஸ் பேரழிவு மற்றும் வெள்ளப் பாதிப்புகளில் இருந்தும் இன்னும் பலர் மீள வேண்டியிருக்கிறது. இந்த நெருக்கடியான நேரத்தில் மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். கொரோனா காலத்தில் மாணவர்களை தேர்வு எழுத வேண்டும் என கட்டாயப்படுத்துவது, அவர்களின் உயிரைப் பணயம் வைத்து எந்தவொரு முடிவும் அவசரகதியில் எடுக்கப்படக் கூடாது. அவர்களின் உடல்நலம் மற்றும் எதிர்காலம் அனைத்துயும் கவனத்தில் கொண்டு, நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு எழுதிய கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.