நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி பச்சுடையாம் பட்டி கிராமத்தில் கடந்த 1946ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டாரத்தில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் இந்தப் பள்ளியில்தான் படித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | கலவரத்தில் எடுத்து சென்ற பொருட்களை சாலையோரம் வீசி சென்ற பொதுமக்கள் !
தங்களது சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த குழந்தைகளின் எதிர்காலத்துக்காக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களே ஒன்றிணைந்து 22 ஏக்கரில் தானமாக வழங்கினர். 22 ஏக்கரில் உள்ள அந்த அரசுப் பள்ளி காலத்திற்கு ஏற்ப மெல்ல மெல்ல சுருங்கி வரத்தொடங்கின.
அரசின் முக்கிய கட்டிடங்கள் எல்லாம் அந்தப் பள்ளியின் நிலத்திலேயே உருவாகத் தொடங்கின. அதன் பலனாக, தற்போது அந்த இடத்தில் வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், மாணவர்கள் நல விடுதி கட்டடம் என உருவாக்கப்பட்டு, செயல்பாட்டில் இருந்து வருகிறது. 22 ஏக்கர் நிலத்தில் அரசு அலுவலகங்களுக்காக மட்டும் 8 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் ஒரு கட்டிடத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறை அரசுக் கட்டிடம் அல்ல. நீதிமன்றம்!
ஒட்டுமொத்த பரப்பளவில், பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் இருந்து இரண்டரை ஏக்கர் நிலத்தை தானமாக கேட்கப்பட்டுள்ளது. அந்த இரண்டரை ஏக்கர் நிலத்தில் நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கான முயற்சி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை அறிந்த அப்பள்ளியில் படித்த முன்னாள் பள்ளி மாணவர்கள், பள்ளிக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தை கையகப்படுத்தி நீதிமன்றம் அமைக்க கூடாது என போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
உடனடியாக நீதிமன்றத்தை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, முன்னாள் மாணவர்கள், ஊர் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆட்சியரை நேரில் சந்தித்து பள்ளி வளாகத்தில் நீதிமன்றம் அமைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் அவர்கள் அனைவரும் மனு அளித்தனர்.
மேலும் படிக்க | "SC கையில ஸ்கூல் போக போகுது" பள்ளியில் ஜாதி வெறியை வளர்க்கும் டீச்சர்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ