திமுக இளைஞர் அணிச் செயலாளராக மு.பெ.சாமிநாதன் நியமனம்.
இதைக்குறித்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
திமுக இளைஞர் அணிச் செயலாளராக கூடுதல் பொறுப்பேற்று பணியாற்றி வரும் மு.க.ஸ்டாலின், கட்சியின் செயல் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதால்,
அவருக்கு பதிலாக, திமுக சட்டதிட்ட விதி 18, 19 பிரிவுகளின்படி, இளைஞர் அணிச் செயலாளராக மு.பெ.சாமிநாதன், இளைஞர் அணி இணைச் செயலாளராக சுபா.சந்திரசேகர் ஆகியோர் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்கள். ஏற்கனவே, நியமிக்கப்பட்ட இளைஞர் அணி துணைச்செயலாளர்கள் இவர்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.