தன் மகனை பரோலில் விடுவித்தமைக்கு பேரறிவாளன் தாயார் திருமதி. அற்புதம்மாள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று (செப்டம்பர் 1) தலைமை செயலகத்தில், பேரறிவாளன் தாயார் திருமதி. அற்புதம்மாள் சந்தித்து, தனது மகன் பேரறிவாளனை பரோலில் விடுவித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.
கடந்த 26 வருடமாக சிறையில் இருந்த பேரறிவாளன் ஆகஸ்ட் 25ஆம் தேதி பரோலில் விடுவிக்கப்பட்டு ஜோலார்ப்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இவர் கடந்த 1991-ம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். 26 ஆண்டுகள் கழித்து பரோல் கிடைத்துள்ளது.
பேரறிவாளனுக்கு சிறைவிடுப்பு அளிக்க வேண்டுமென அவரது தாயார் அற்புதமம்மாள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார். இதனையடுத்து பேரறிவாளனுக்கு ஒரு மாத காலம் பரோலில் செல்ல தமிழக அரசு அனுமதி அளித்தது.