சட்டசபையில் இன்று முதல்லமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் கூறியது:-
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்கள் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வார்டு மறுவரைவு ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது. இது உள்ளாட்சி தேர்தல் வார்டு பிரிக்கும் கால அட்டவணையை 28.2.2018-க்குள் அறிக்கையை வழங்கும் அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்.
இந்த ஆண்டு இறுதியில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
இதையடுத்து, 2017-18 ஆம் ஆண்டிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
இதனை துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கால் செய்தார். துணை நிதிநிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களுக்காக 6,522-கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி போக்குவரத்துத் துறைக்கு கூடுதலாக 2,159-கோடி நிதி ஒதுக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.