தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது. சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை அவ்வப்போது பெய்து வருகிறது. பருவமழை தொடங்கியவுடன் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், சீர்காழி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.
மேலும் படிக்க | 50 ஆண்டுக்கு முன் போட்ட விதை..! இந்தியாவின் "குட்டி ஜப்பானாக ஓசூர்" மாறிய வரலாறு
அதனைத்தொடர்ந்து இடையில் சில நாட்கள் இடைவெளி விட்ட நிலையில், கடந்த 10-ந்தேதி வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக 2-வது மழைப்பொழிவு தொடங்கியது. இதில் டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சீர்காழியில் 122 ஆண்டுகள் வரலாற்றில் இல்லாத வகையில் 44 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.
இந்த நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது . இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் த்தில் நாளை மறுநாள் முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | நீரிழிவு நோய் வந்துவிட்டதா? எப்படி தெரிந்து கொள்வது? அறிகுறிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ