"நரேந்திர மோடி மகா ராஜா வரவு நல்வரவு ஆகுக" ஸ்ரீரங்கத்தில் தடபுடல் வரவேற்பு

Narendra Modi: திருச்சியில் உள்ள ஶ்ரீரங்கம் கோயிலுக்கு சென்ற பிரதமருக்கு, பாரத பிரதமர் ராஜா நரேந்திர மோடி மகா ராஜா வரவு நல்வரவு ஆகுக என கோலமிட்டு வரவேற்பு கொடுக்கப்பட்டது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 20, 2024, 12:42 PM IST
  • திருச்சி ஸ்ரீரங்கத்தில் பிரதமர் மோடி
  • மகாராஜா வரவு நல்வரவு ஆகுக
  • உற்சாக வரவேற்பு அளித்த பாஜகவினர்
"நரேந்திர மோடி மகா ராஜா வரவு நல்வரவு ஆகுக" ஸ்ரீரங்கத்தில் தடபுடல் வரவேற்பு title=

Narendra Modi: ஜனவரி 22ம் தேதி, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்பதற்கு முன், பிரதமர் மோடி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் ஆகிய புனித தலங்களில் சுவாமி தரிசனம் செய்கிறார். அதற்காக இன்று, காலை 10:30 மணிக்கு, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து, ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஹெலிகாப்டரில் செல்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருச்சியில், யாத்ரி நிவாஸ் எதிரே கொள்ளிடம் பஞ்சக்கரை பகுதியில் உள்ள திடலில், 3 ஹெலிபேடும் அமைக்கப்பட்டது. பிரதமர் மோடி, அங்கிருந்து காரில், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றார்.

மேலும் படிக்க | எம்ஜிஆர் போட்ட பிச்சையினால் தான் கருணாநிதி முதல்வர் ஆனார் - கடம்பூர் ராஜூ!

அங்கிருந்து பகல் 12:40 மணிக்கு புறப்பட்டு, காரில் ஹெலிபேட் வந்து, ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் செல்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு, திருச்சியில் ட்ரோன் பறக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, கோவில் வளாகம் மட்டுமின்றி, கோவிலை சுற்றி உள்ள கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இது தவிர, நேற்று மாலை 6 மணி முதல் இன்று பிற்பகல் 2.30 மணி வரை, ஸ்ரீரங்கம் ரெங்கம் ரெங்கநாதர் கோாவிலில் பொது தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், 3,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருவதை முன்னிட்டு, இன்று அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை மற்றும் புதுக்கோட்டை சாலை தஞ்சாவூர் சாலையில் இருந்து வரும் வாகனங்கள், காற்று வழியில் திருப்பி விடப்படுகின்றன. பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சியில் விமான நிலையம், டிவிஎஸ் டோல்கேட், திருவானைக்காவல், கல்லுக்குழி,  ஸ்ரீரங்கம் உட்பட 12 இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

 ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீதர் ஸ்தோத்திர பாடல் கோஷ்டியின் மகளிர் அணியினர், ஹேமா ஸ்ரீதரன் தலைமையில், பிரதமரை வரவேற்கும் விதமாக, பச்சை மாமலை போல் என்ற பிரபந்த பாசுரம், ஆண்டாள் பற்றிய கும்மி ஆட்டம், கோலாட்டம் நிகழ்ச்சிகள் நடத்தினர். இது தவிர ரங்கநாத பாதுகா வித்யாலயா அறக்கட்டளை  சார்பில்  ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றி உள்ள சாலைகளில் பிரதமரை வரவேற்கும் விதமாக, "பாரத பிரதமர் ராஜா நரேந்திர மோடி மகா ராஜா வரவு நல்வரவு ஆகுக " வாசகங்கள் எழுதி பிரதமர் மோடியை வரவேற்றனர்.

மேலும் படிக்க | பிரதமர் மோடி வருகை 3 நகரங்களில் இதை செய்யக்கூடாது...! அதிரடி உத்தரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News