தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு!!
வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரட்சரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், பா.ஜ.க. ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டதாக தெரிவித்தார். அதிகாரிகளை மாற்றக் கோரியும் மாற்றவில்லை என்று கூறிய ஸ்டாலின், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கார்ப்பரேட்களுக்கான அரசு என்று விமர்சித்தார். மத்திய அரசு சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றி இருந்தால் தூத்துக்குடிக்கு கப்பல்கள் எளிதாக வந்து செல்லும் நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தி.மு.க. ஆதரவுடன் மத்தியில் ராகுல் காந்தி தலைமையில் ஆட்சி அமையும் போது சேது சமுத்திர திட்டம் நிச்சயம் நிறைவேற்றப் படும் எனவும் ஸ்டாலின் உறுதி அளித்த அவர், தலைமைத் தேர்தல் அதிகாரி ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக விமர்சனம் செய்தார்.
முன்னதாக வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்த், அரக்கோணம் வேட்பாளர் ஜெகத்ரட்சகன் மற்றும், ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார். திமுகவினரை குறிவைத்து வருமானவரித்துறை சோதனை நடைபெறுவதாக குறிப்பிட்ட அவர், அதற்கெல்லாம் அஞ்சப்போவது இல்லை என்றார்.