திமுக தலைவராக MK ஸ்டாலின் ஒருமனதாக தேர்வுசெய்யப்படுகிறார்!

திமுக தலைவர் பதவிக்கு வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் திமுக தலைவராக MK ஸ்டாலின் ஒருமனதாக தேர்வுசெய்யப்படுகிறார்!

Last Updated : Aug 26, 2018, 05:47 PM IST
திமுக தலைவராக MK ஸ்டாலின் ஒருமனதாக தேர்வுசெய்யப்படுகிறார்! title=

திமுக தலைவர் பதவிக்கு வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் திமுக தலைவராக MK ஸ்டாலின் ஒருமனதாக தேர்வுசெய்யப்படுகிறார்!

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவினை அடுத்து தற்போது திமுக-வின் தலைவருக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் பொருப்பிற்கு MK ஸ்டாலின் அவர்கள் இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்தார்.

65 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார் ஸ்டாலின். அவரது வேட்புமனுவினை சென்னை அறிவாலயத்தில், திமுக அமைப்பு செயலாளர் RS பாரதி அவர்கள் பெற்றுக்கொண்டார்.

அதேவேலையில் திமுக-வின் பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் அவர்களும் வேட்புமனை தாக்கல் செய்தார்.

தலைவர் பதவிக்கு வேறுயாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்றால், ஒருமனதாக ஸ்டாலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். அதேப்போல் பொருளாளர் பதவிக்கு வேறுயாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்றால், ஒருமனதாக துரை முருகன் அவர்கள் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று மாலை 4 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்தவதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில் MK ஸ்டாலின், திமுக-வின் தலைவராக போட்டியின்றி தேர்வாகிறார் என தெரிவிக்கப்பட்டள்ளது. 

வரும் 28-ஆம் தேதி நடைப்பெறவுள்ள திமுக செயற்குழு கூட்டத்தில் MK ஸ்டாலின் தலைவராக பொருப்பேற்பார் என தெரிகிறது, மேலும் திமுக-வின் பெருளாளாரக துரை முருகன் அவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News