சபரிமலை விவகாரம்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது: MKS

சபரிமலை வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்று மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Last Updated : Sep 28, 2018, 02:57 PM IST
சபரிமலை விவகாரம்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது: MKS title=

சபரிமலை வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்று மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

 

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில், 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. மிக நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த வழக்கத்தை எதிர்த்து, இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மனு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ம் தேதி சுப்ரீம் கோர்ட்ட பரிந்துரைத்திருந்தது. அப்போது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்ல தடை விதிப்பது பாகுபாடு ஆகாதா? அரசியலமைப்பு சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகாதா? என்பது உள்ளிட்ட 5 கேள்விகளை நீதிபதிகள் பதிவு செய்திருந்தனர். 

இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திராசூட், இந்து மல்கோத்ரா ஆகிய 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு தொடர்ச்சியாக 8 நாள்கள் விசாரணை நடத்தியது. 

இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது, தலைமை நீதிபதி உள்ளிட்ட 4 நீதிபதிகள் ஒத்த கருத்தையும், நீதிபதி இந்து மல்கோத்ரா மட்டும் மாற்று கருத்தை கொண்டிருந்தார். தலைமை நீதிபதி தனது தீர்ப்பில், 

சபரிமலை வழிபாட்டில் பெண்களுக்கு பாகுபாடு காட்டக்கூடாது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும். பெண் கடவுள்களை வணங்கும் நாட்டில் பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல. நீண்ட காலமாக பெண்கள் மீது பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது. கடவுளை வணங்குவதில் ஆண் - பெண் பாகுபாடுக் கூடாது. கோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதி மறுப்பது சட்ட விரோதம் என குறிப்பிட்டார். 

இந்நிலையில் சபரிமலை வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்று மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், அவர்  'ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம்' என்பதை நிரூபிக்கும் வகையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்று தெரிவித்த அவர் , சமூக நீதி - பாலின சமத்துவம் - பெண் விடுதலை ஆகிய உயர்ந்த தத்துவங்களை நோக்கிய பயணத்தில் இத்தீர்ப்பு மைல்கல் என கூறினார். 

Trending News