மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார் என மு.க.ஸ்டாலின் டிவீட் பதிவு கூறியுள்ளார்.
பெரியார் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள் செப்டம்பர் 17, 1879-ம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தார். இவர் சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர்.
பெரியாரின் 46வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் பெரியாருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே இன்று பெரியாரின் நினைவு தினத்தை அடுத்து தமிழக பாஜகவின் டிவீட்டர் பக்கத்தில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு டிவீட் பதிவு செய்யப்பட்டிருந்ததை கண்டித்து திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து அந்த டிவீட்டை பாஜக நீக்கியது.
இந்த நிலையில், இதுகுறித்து மு.க. ஸ்டாலின் தனது டிவீட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
பெரியாரை இழிவுபடுத்தும் கருத்தைப் பதிவு செய்து, எதிர்ப்பு வந்ததும் நீக்கியுள்ளது தமிழக பாஜக. அப்பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே? அந்த பயம் இருக்கட்டும்! மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார்! அதிமுக, இதற்காவது புலியாகப் பாயுமா? இல்லை மண்புழுவாய் பதுங்குமா?
#Periyar ஐ இழிவுபடுத்தும் கருத்தைப் பதிவு செய்து, எதிர்ப்பு வந்ததும் நீக்கியுள்ளது @BJP4TamilNadu அப்பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே?
அந்த பயம் இருக்கட்டும்! மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார்!
அதிமுக, இதற்காவது புலியாகப் பாயுமா? இல்லை மண்புழுவாய் பதுங்குமா?
— M.K.Stalin (@mkstalin) December 24, 2019
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.