DMK என்றுமே தேர்தலை கண்டு அஞ்சி ஓடி ஒளிந்தது இல்லை - MK.ஸ்டாலின்

தேர்தலை கண்டு திமுக அஞ்சியது இல்லை என்றும், உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!

Last Updated : Dec 12, 2019, 06:26 AM IST
DMK என்றுமே தேர்தலை கண்டு அஞ்சி ஓடி ஒளிந்தது இல்லை - MK.ஸ்டாலின்  title=

தேர்தலை கண்டு திமுக அஞ்சியது இல்லை என்றும், உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!

சென்னை: புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து பிறகு மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து, அறிவிக்கப்பட்ட தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இந்தநிலையில், சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்.... ‘ஏற்கெனவே, 2016 ஆம ஆண்டு தி.மு.க சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அப்போது அரசுச் செயலாளர் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தார். அதில், ‘1991 ஆம் மக்கள் தொகை அடிப்படையில் 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது 2011 ஆம் ஆண்டுக்கான மக்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் தவறான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முரண்பாட்டை உணர்ந்துதான், 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளாட்சித் தேர்தலை நடத்தவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநிலத் தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை புரிந்துகொண்டு தேர்தலை முறையாக நடத்தவேண்டும்.

9 மாவட்டங்களுக்குத் தேர்தல் நடத்தக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு அ.தி.மு.கவுக்கு மரண அடி. நாங்கள், தேர்தலை நிறுத்தவேண்டும் என்று கோரவில்லை. தேர்தலை நிறுத்தவேண்டும் என்று தி.மு.க கோரவில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளே தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை தி.மு.க உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்’ என்று தெரிவித்தார். 

 

Trending News