தெலங்கான முதல்வர் சந்திர சேகர ராவை சந்தித்தப்பின் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறியுள்ளார் முக ஸ்டாலின் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த திமுக தலைவர் முக ஸ்டாலின், சந்திரசேகர ராவை சந்தித்திருப்பதன் மூலம், தனது நிலைப்பாட்டில் இருந்து மாறுபடுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வெஞ்சமாங்கூடலூர், குரும்பப்பட்டி, இனுங்கனூர், வேலம்பாடி அண்ணா நகர் ஆகிய பகுதியில் வாக்கு சேகரித்தார்.
இதற்கிடையில் பள்ளப்பட்டி ஷா நகர் கார்னரில் பேசிய அவர், செந்தில் பாலாஜி மூன்று ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறிவிட்டதாக குற்றம் சாட்டினார்.
தெடர்ந்து பேசிய அவர் அத்தொகுதி மக்களுக்கு 15 லட்சம் வீடு கட்டி கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், வீட்டு மனை இல்லாதவர்களுக்கு வீடு கட்டித்தரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த ஸ்டாலின் தற்போது சந்திரசேகர ராவை சந்தித்திருப்பது, வேறு பாதையில் செல்வதைக் காட்டுவதாகத் தெரிவித்தார். முன்னதாக நேற்று தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் அவர்கள் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ஆனது மரியாதை நிமித்தமான சந்திப்பு என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.