நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அவரிடம் வழங்கினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 1, 2022, 01:12 PM IST
  • மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார்.
  • மத்திய அரசிடமிருந்து பெறவேண்டிய நிலுவைத் தொகைகளை விடுவிக்க கோரிக்கை.
  • சரக்கு மற்றும் சேவை வரி இழப்பிட்டிற்கான காலக்கெடுவினை நீட்டிக்கக் கோரிக்கை.
நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!  title=

நேற்று பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலக அறையில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். பின்னர் இன்று காலை 10.30 மணிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார்.

அப்போது தமிழகத்துக்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும், தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு தேவையான கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி, கோரிக்கை மனுவை வழங்கினார்.

Stalin met Nirmala Sitharaman

அந்த கோரிக்கை மனுவில் பின்வரருமாறு குறிப்பிட்டுள்ளது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (1.4.2022) புதுடில்லியில், மாண்புமிகு ஒன்றிய நிதித்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து, தமிழகத்தின் நிதி தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அதன் விவரங்கள் வருமாறு:

14வது நிதிக்குழு உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பரிந்துரைத்த அடிப்படை மானியம் மற்றும் செயல்பாட்டிற்கான எஞ்சிய மானியத்தினை விடுவிக்கக் கோருதல்:

2015-2020 காலகட்டத்திற்கு, 14வது நிதிக்குழு. தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகளுக்கு அடிப்படை மானியமாக 7.899.69 கோடி ரூபாய் பரிந்துரைத்தது. ஆனால், மொத்தமுள்ள 12.525 கிராமப் பஞ்சாயத்துகளில், 2900 கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறாததால், 548.76 கோடி ரூபாய் அடிப்படை மானியத்தை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை. நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்ததால், இந்த 2900 கிராமப் பஞ்சாயத்துகளில் தேர்தல்கள் அப்போது நடத்த இயலவில்லை.

இந்த அரசு பொறுப்பேற்றப் பின்னர், 2900 கிராமப் பஞ்சாயத்துகளில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டு, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்கள் பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதைப்போன்று 14வது நிதிக்குழு 2016-17 முதல் 2019-20 வரையிலான காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான செயல்பாட்டு மானியமாக தமிழ்நாட்டுக்கு 2,524.20 கோடி ரூபாய் பரிந்துரை செய்துள்ளது. அந்த மானியத்தொகையில் பரிந்துரைக் காலத்தில் ஒன்றிய அரசு 2016-17 ஆம் ஆண்டுக்கான செயல்பட்டு மானியமாக 494.09 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. இந்நிலையில் அதற்கான பயன்பாட்டுச் சான்றிதழ் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டு. 2017-18ம் ஆண்டுக்கான செயல்பாட்டு மானியத்தினை விடுவிக்க கோரிக்கை விடப்பட்டது. மானியங்களைப் பெறுவதற்கான அனைத்து நிபந்தனைகளை நிறைவேற்றியபோதும், பயன்பாட்டுச் சான்றிதழை அனுப்பிய நிலையிலும். 2017-18ம் ஆண்டுக்கான செயல்பாட்டு மானியம் தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து 2018-19 மற்றும் 2019 - 20 ஆம் ஆண்டுக்கான மானியமும் விடுவிக்கப்படவில்லை. 

இருப்பினும் 2017-18 ஆம் ஆண்டிற்கான செயல்பாட்டு மானியத்தினை பெரும்பாலான மற்ற மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. 
எனவே அடிப்படை மானிய நிலுவைத்தொகையான 548.76 கோடி ரூபாயையும். செயல்பாட்டு மானியம் 2029.22 கோடி ரூபாயையும் தமிழகத்திற்கு விணந்து விடுவிக்க வலியுறுத்தப்படுகிறது.

மேலும் படிக்க | COVID 19 4th Wave: சுனாமியாய் சுழற்றியடிக்குமா கொரோனாவின் நான்காவது அலை? அச்சத்திற்கு ஆதாரம் உண்டா?

ஒன்றிய அரசிடமிருந்து பெறவேண்டிய நிலுவைத் தொகைகள்

பெருந்தொற்றினால், மாநிலத்தின் வருவாய் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து வந்தாலும், மாநிலம் இன்னும் கடும் நிதிச்சுமையில் உள்ளது. பெருந்தொற்றினால், சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், மருத்துவக் கருவிகள் மற்றும் மருந்துகளை கொள்முதல் செய்யவும், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்களைச் செயல்படுத்தவும், மாநில அரசிற்கு கூடுதல் செலவினங்கள் ஏற்பட்டுள்ளது. 

சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு நிலுவைத் தொகையான 13,504.74 கோடி ரூபாய் உட்பட 20,860.40 கோடி ரூபாய் ஒன்றிய அரசிடம் நிலுவையில் உள்ளது. மாநிலம் தனது நிதி நெருக்கடியிலிருந்து மீண்டு வர, இந்த நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஒன்றிய அரசிற்கு வலியுறுத்தப்படுகிறது.

சரக்கு மற்றும் சேவை வரி இழப்பிட்டிற்கான காலக்கெடுவினை நீட்டிக்கக் கோருதல் 

சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்திய பொழுது, மாநிலத்தின் வருவாய் பாதுகாக்கப்படும் என்று ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், மாநிலம் தனது நிதி சார்ந்த அதிகாரத்தைக் கைவிட்டது. கடந்த 5 ஆண்டுகளில், உறுதியளிக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட வருவாய்க்கும், வசூலிக்கப்பட்ட வகுவாய்க்கும் இடையே பெரும் இடைவெளி இருந்துள்ளது.

பெருந்தொற்றிற்கு முன்னரே. இத்தகைய போக்கு காணப்பட்டது. அதன்பின், இந்த இடைவெளி அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. கோவிட் பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து வந்தாலும், மாநிலத்தின் வருவாய் இன்னும் அதிகரிக்களில்லை. இந்நிலையில். 30.06.2022 அன்று, சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டுத் தொகை வழங்கும் காலம் முடிவுக்கு வருகிறது. இதன் விளைவாக, 2022-23 நிதியாண்டில், தமிழ்நாடு ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பைச் சந்திக்க நேரிடும்.

இழப்பீடு வழங்கும் காலத்தை, ஜூன் 2022 க்குப் பின் குறைந்த பட்சம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசிற்கு வலியுறுத்தப்படுகிறது.

மேலும் படிக்க | Corona fourth wave: வீரியம் மிக்க ஓமிக்ரான் வைரசால் ஹாங்காங்கில் நான்காவது கோவிட் அலை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News