இதுவரை சல்லி பைசா கூட தரவில்லை.. மத்திய அரசு தமிழக மக்களை வஞ்சிக்கிறது -அமைச்சர் தங்கம்

Thangam Thennarasu: தமிழக மக்கள் திமுக அரசுக்கு ஆதரவாக இருப்பதால் தமிழக மக்களை மத்திய அரசு வஞ்சிப்பதாக நான் கருத்துக்கிறேன் -அமைச்சர் தங்கம் தென்னரசு 

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 22, 2024, 02:52 PM IST
இதுவரை சல்லி பைசா கூட தரவில்லை.. மத்திய அரசு தமிழக மக்களை வஞ்சிக்கிறது -அமைச்சர் தங்கம் title=

TN Assembly Latest Updates: தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் இறுதி நாளான இன்று, தமிழக சட்டசபையில் தாக்கலான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்தன. அப்பொழுது சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதிலுரை குறித்து பார்ப்போம். 

மத்திய அரசை சாடிய அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை மழை பாதிப்புகளை சரி செய்ய 19, 609 கோடி மாநில அரசுக்கு நிவாரணம் அளிக்க மத்திய அரசிடம் கோரி வருகிறோம்.

18000 கோடி தென் மாவட்ட மழை பாதிப்புகளை சரிசெய்யவும் கோரிக்கை விடுத்து உள்ளோம்.

இதுவரை ஒரு அம்மஞ்சல்லி  கூட மத்திய அரசு நிவாரணம் அளிக்கவில்லை.

தமிழக மக்கள் திமுக அரசுக்கு ஆதரவாக இருப்பதால் மத்திய அரசு தமிழக மக்களை வஞ்சிப்பதாக நான் கருத்துக்கிறேன்.

540 கோடி செலவில் மிக்ஜாம் புயல் பாதிப்புகளுக்கு தமிழக அரசு நிவராணம் அளித்து உள்ளது.

மெட்ரோ ரயில் திட்டம் 50 % மத்திய அரசு 50 % மாநில அரசு, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2 கட்ட பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. 

மத்திய அரசின் நியாயமற்ற செயலால் மாநில அரசுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்பட்டு கடனும் அதிகரித்துள்ளது.

எங்கள் மாநிலம் மத்திய அரசுக்கு 60000 கோடி தருகிறது என்று அப்போதய குஜராத் முதல்வர் மோடி தெரிவித்தார். நாமும் அதையே தான் இப்போது தெரிவிக்கிறோம்.

மாநில அரசின் நிதிநிலையை பாதிக்கும் வகையில் கடுமையான நிபந்தனைகளை மத்திய அரசு விதித்துள்ளது.

மாநில அரசு வளர்ச்சி திட்டங்களுக்காக நிதி ஆதாரத்தை திரட்டும் மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது

தமிழக மக்களின் உயிராக கருதி தமிழக முதலமைச்சர் அவர்கள் கடமையை செய்து வருகிறார்.

ராம ராஜ்யம் எப்படி இருந்தது என்று யான் ஒன்றும் அறியேன் பராபரமே.

ஆனால், எல்லோருக்கும் எல்லாமுமான ராஜ்யமாக திமுக அரசு உள்ளது என்றார். 

மேலும் படிக்க - மதுரை எய்ம்ஸ் போல் இல்லாமல்.. வானதி சீனிவாசனை சீண்டிய முதல்வர் மு.க. ஸ்டாலின்

சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்புகள்

காட்டு மன்னார்கோயில் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் பள்ளி, கல்லூரி விடுதிகளை பராமரிக்க எண்ணிக்கை எடுக்கப்பட்டு, அதன்படி சுமார் 521 ஆதிதிராவிடர் விடுதிகளும், 15 பழங்குடியினர் விடுதிகளும் சுமார் 100கோடி நிதி மதிப்பீட்டில் பணி நிறைவுபெறும்.

ஆதிதிராவிடர் தொழில் முனைவோருகளுக்காக 30 ஆண்டுகளுக்கு முன்பாக துவங்கப்பட்டு, பயன் படுத்தப்படாமல் இருக்கும் தொழிற்பேட்டைகள் 50 கோடி மதிப்பீட்டில் சரிசெய்யப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

திருச்செங்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டவர்களின் உதவியாளர்கள் பயன் பெறும் வகையில் சிறிய நூலகம் 3 கோடி பட்ஜெடில் அமைக்கப்படும்.

குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கையை கவனத்தில் எடுத்துக் கொண்டு மின்விபத்தில் உயிரிழப்பு ஏற்படாமல் சிகிச்சை பெறுவோர்களுக்கு 1 லட்ச ரூபாய் உதவித்தொகையும், உயிரிழந்தவர்களுக்கு 5 லட்ச ரூபாயும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. 

அதை உயர்த்தி சிகிச்சை பெற்று வருவோருக்கு 1.5 லட்ச ரூபாயகவும், உயிரிழப்பிற்கு 5 லட்சத்திலிருந்து உயர்த்தி 10 லட்சமாக வழங்கப்படும் என அறிவித்தார்.

மேலும் படிக்க - TN Budget 2024 Highlights:தமிழகத்தில் வரப்போகும் மாற்றங்கள் என்ன? எந்த திட்டத்திற்கு எவ்வளவு ஒதுக்கீடு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News