தமிழகத்திற்கு கூடுதல் மண்ணெண்ணெய் ஒதுக்குக -காமராஜ்!

தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகளில் கூடுதலாக மண்ணெண்ணெய் ஒதுக்கக் கோரி டெல்லியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து அமைச்சர் காமராஜ் வலியுறுத்தியுள்ளார்!

Last Updated : Sep 3, 2019, 10:28 AM IST
தமிழகத்திற்கு கூடுதல் மண்ணெண்ணெய் ஒதுக்குக -காமராஜ்! title=

தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகளில் கூடுதலாக மண்ணெண்ணெய் ஒதுக்கக் கோரி டெல்லியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து அமைச்சர் காமராஜ் வலியுறுத்தியுள்ளார்!

தமிழகத்துக்கான மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு 24%-ஆக குறைத்த நிலையில் இந்த சந்திப்பு மிக முக்கிய ஒன்றாக கருதப்படுகிறது.

முன்னதாக தமிழகத்தில் நியாய கடைகளில் மக்களுக்கு வழங்கும்  மண்ணெண்ணெய் அளவு குறைத்தது வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட சுற்றறிக்கை ஒன்றில், மாநிலத்தின் மொத்த தேவையில் தற்போது 24% மண்ணெண்ணெய் மட்டுமே கிடைக்கிறது. மத்திய அரசின் பொதுவிநியோகதிட்ட  மண்ணெண்ணெய் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

எனவே உணவுப் பொருள் வழங்கல்துறை, அனைத்து மாவட்ட அலுவலர்கல் ,குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைத்து வழங்கப்பட உள்ள மண்ணெண்ணெய் அளவு குறித்து, அனைவரும் அறியும்படி, அனைத்து நியாய விலைக்கடைகளிலும் விளம்பரப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் மக்களுக்கு வழங்கும் மண்ணெண்ணையின் அளவு குறைத்தது வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், டெல்லியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து அமைச்சர் காமராஜ் கூடுதலாக மண்ணெண்ணெய் ஒதுக்கக் கோரி வலியுறுத்தியுள்ளார்.

Trending News