கருணாநிதி பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்

தேர்தலில் நமக்கு வாக்களிக்கத் தவறியவர்கள் பலரது பாராட்டையும் இப்போது கழகத்துக்கு வாங்கித் தரும் வகையில் செயல்பட்டு வருகிறேன்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 3, 2021, 09:03 AM IST
  • இன்று கலைஞரின் 98-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகின்றது.
  • கொரோனா பாதிப்பு நிவாரணமாக 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம்
  • ‘தலைநிமிர்ந்து வருகிறேன்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள காணொளி பதிவு
கருணாநிதி பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம் title=

 தமிழ்நாடு முதல்வரும், திராவிட (DMK) முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி (M Karunanidhi)  அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தலைநிமிர்ந்து வருகிறேன்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள காணொளி பதிவில் உருக்கமாகப் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது.,

 

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் (M Karunanidhi) 98வது பிறந்த நாளை திமுகவினர் இன்று கொண்டாடி வருகின்றனர். கொரோனா (Coronavirus) காலம் என்பதால், தொற்று பரவலை கருத்தில்கொண்டு பெரிய அளவில் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு, பல மக்கள் நல திட்டங்களை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) துவக்கிவைக்க உள்ளார். 

ALSO READ | கலைஞர் கருணாநிதி பிறந்தநாள்: கொரோனா நிவாரண திட்டங்களை தொடங்கி வைக்கிறார் தமிழக முதல்வர்

அந்தவகையில் கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையையான 2000 ரூபாய் கொடுக்கும் பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) இன்று துவக்கி வைக்கிறார். மேலும், கொரோனா ஊரடங்குக்காக மக்களுக்கு 14 வகை மளிகைப்பொருட்களை வழங்கும் திட்டத்தையும் இன்று முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். முன்களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கான நிவாரண நிதி, அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரணம் வழங்கும் திட்டம் ஆகியவையும் இன்று தொடங்கும்.

கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது சமூகவலைதளப் பக்கத்தில் 'தலைநிமிர்ந்து வருகிறேன்' என்ற தலைப்பில் #KalaignarForever என்ற ஹேஷ்டேக்குடன் வெளியிட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News