நாமக்கல் மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தில் கட்சி நிர்வாகி இல்ல திருமணவிழாவில் பங்கேற்க வந்த மதிமுக பொதுசெயலாலர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில்...
"பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது, கைது செய்வது தவறானது. இளைஞர்கள், குழந்தைகள் ஆர்வ மிகுதியால் நேரம் பார்க்காமல் பட்டாசு வெடித்துள்ளனர், அவர்களை கண்டித்து வெளி விடாமல் கைது செய்வது கண்டிக்கத்தக்கது.
ஸ்டர்லைட் ஆலைக்கு எதிராக வழக்கு நடைப்பெற்று வரும் நிலையில், ஆலையினை திறப்பேன் என அக்குழுமத்தின் தலைவர் அணில் அகர்வால் தெரிவித்துள்ளது புரியாத புதிராக உள்ளது.
ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரின் விடுதலையில் ஆளுநரின் பதில் கூறாமல் மௌனம் காத்து வருகின்றார். முல்லை பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம்.
சிங்களர்களின் ஆட்சியில் தமிழர்களுக்கு எப்போதும் நியாயம் கிடைப்பதில்லை. இனப்படுகொலை குற்றவாளிகளை சர்வதேச கூண்டில் நிற்க வைத்து ஐநா தண்டிக்க வேண்டும்.
வரும் உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல்களை திமுக-வுடன் அணிசேர்ந்து சந்திக்க மதிமுக முடிவு செய்துள்ளது. ஆனால் மதிமுக-வுடனான கூட்டணி குறித்து திமுக தலைமை தான் முடிவு செய்யவேண்டும்" என தெரிவித்துள்ளார்.