Tenkasi Puliyangudi Accident: தென்காசி மாவட்டம் புளியங்குடி பகவதி அம்மன் கோவில் தெரு பகுதியைச் சார்ந்தவர்கள் கார்த்திக், வேல் மனோஜ், சுப்பிரமணி, மனோகரன், போத்திராஜ். இவர்களுடன் மற்றொருவர் என ஆறு பேர் சேர்ந்து நேற்று (ஜன. 27) இரவு மாருதி சுசூகி ஷிப்ட் டிசைர் காரில் குற்றாலத்திற்கு குளிக்க சென்றனர்.
விபத்துக்கு காரணம் என்ன?
குற்றாலத்தில் குளித்துவிட்டு அதிகாலை 3.30 மணி அளவில் புளியங்குடி நோக்கி திரும்பிக் கொண்டிருந்தபோது, புளியங்குடி அருகில் உள்ள சிங்கிலிப்பட்டிற்கும் புன்னையாபுரத்திற்கு இடையை ஓட்டுனர் கண் அயர்ந்ததாக கூறப்படுகிறது. இதில் எதிர்பாராத விதமாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிமெண்ட் ஏற்றிச் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில், கார் மீது லாரி ஏரி இறங்கியதாக கூறப்படுகிறது .
இதில் காரில் இருந்த டிரைவர் உள்ளிட்ட ஆறு நபர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒருவர் மட்டும் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரும் உயிரிழந்தார்.
மேலும் படிக்க | 'மல குழி மரணங்களை தடுக்க ஆர்வம் காட்டவில்லை...' தமிழ்நாடு அரசு மீது கடும் தாக்கு
மீட்பு பணிகள் தீவிரம்
அதிகாலை நடந்த இந்த கோரச் சம்பவம் குறித்து காவல்துறையினரும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினரும் ,ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்தவர்கள் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அரை மணி நேரமாக கடுமையாக போராடி காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டனர்.
மேலும் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் அங்கே முகாமிட்டு மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் சம்பவ இடத்தில் விரைந்து சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறு பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
முதற்கட்ட தகவல்
தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு தற்போது போக்குவரத்து பாதிப்பு சீரமைக்கப்பட்டுள்ளது. அதிகாலை நடந்த இந்த கோரச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புளியங்குடியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற தெப்பத் திருவிழாவில் கலந்து கொண்ட ஒரே சமுதாயத்தைச் சார்ந்த ஐந்து நபர்களும் மற்றொரு சமுதாயத்தைச் சார்ந்த ஒரு நபரும் என ஆறு நபர்கள் காரில் குற்றாலம் சென்று விட்டு திரும்பும் வழியில் இந்த சம்பவம் நடந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
தொப்பூர் விபத்து
கடந்த சில நாள்களுக்கு முன், தர்மபுரி - சேலம் நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகில் நெல் மூட்டைகள் ஏற்றி சென்ற ஈச்சர் லாரி மூன்று கார்கள் ஒரு லாரி மீது ஒன்றோடொன்று மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. விபத்தின் வீடியோ காட்சிகளும் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கோர விபத்தில் மொத்தம் 4 பேர் பலியானார்கள். மேலும், தரமான சாலைகள் இல்லாததும் இதுபோன்ற விபத்துகளுக்கு காரணமாக இருப்பதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கும் கருத்துக்களையும் புறந்தள்ள இயலாது.
மேலும் படிக்க | சிறுவனின் காதை பிய்த்த கொடூர ஆசிரியை! கதறி அழும் பெற்றோர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ