Cyclone alert: ரெட் அலர்ட் விடும் மான்டோஸ் புயல்! தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

Mandous Cyclone Red alert: மான்டோஸ் புயல் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை, 6 இடங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 8, 2022, 12:00 PM IST
  • மான்டோஸ் புயல் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
  • 6 இடங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
  • தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
Cyclone alert: ரெட் அலர்ட் விடும் மான்டோஸ் புயல்! தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு title=

சென்னை: மான்டோஸ் புயல் காரணமாக வரும் 10ஆம் தேதிவரை அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இங்கு இன்ரு முதல் இரு நாட்களுக்கு, அதாவது 10ம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை முன்கணிப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாண்டூஸ் புயல் தமிழகத்தை நெருங்கி வருவதால், தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை காரணமாக டிசம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் மாநிலத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவடைந்து புயலாக மாறி வட தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா கடற்கரையை தாண்டி தென்மேற்கு வங்கக்கடலை சென்றடையும்.

மேலும் படிக்க | வலுவடைந்தது மான்டோஸ் புயல் : கனமழைக்கு வாய்ப்பு... பள்ளிகளுக்கு விடுமுறை!

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் டிசம்பர் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை கனமழை பெய்யும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா மற்றும் வட இலங்கைக் கடலோரப் பகுதிகளில் டிசம்பர் 8-ம் தேதி முதல் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், டிசம்பர் 8-ஆம் தேதி முதல் மணிக்கு 60 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 9 முதல் 10ம் தேதி வரை மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் இருக்கும். பிராந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி பி.செந்தாமரைக்கண்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் காற்று மற்றும் மழை கடுமையாக இருக்கும் என்பதால், புயல் மாநிலத்தை மோசமாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என தெரிவித்தார்.

மழையினால் ஏற்படும் சேதங்களில் இருந்து மக்களை காக்க, மீட்புப் பணிகளுக்காகவும், மழை பெய்தவுடன் தண்ணீர் தேங்குவதைத் தடுக்கவும் தமிழக வருவாய் துறையினர் தயாராகி வருகின்றனர். அனைத்து மாவட்ட நிர்வாகங்களின் கீழ் பம்புகள் மற்றும் இதர இயந்திரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள, அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களும் தயார் நிலையில் உள்ளன.

மேலும் படிக்க | தமிழகத்தை மிரட்டும் மான்டோஸ் புயல்... தயார் நிலையில் NDRF குழு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News