பேக்கரி ஊழியருக்கு அரிவாள் வெட்டு - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

மானாமதுரையில் கடையில் சிகரெட் பிடிக்கக்கூடாது என கூறிய பேக்கரி ஊழியரை இளைஞர்கள் அரிவாளால் வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 01:38 PM IST
பேக்கரி ஊழியருக்கு அரிவாள் வெட்டு - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி title=

மானாமதுரை சிவகங்கை ரோட்டில் கோர்ட் எதிர்புறம் உள்ள பேக்கரியில் ஆலம்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்த பேக்கரிக்கு கேக் வாங்க வந்த இளைஞர்கள் 4 பேர் பேக்கரியில் உள்ளே நின்று, சிகரெட் பிடித்த போது, சதீஷ் சிகரெட் பிடிக்கக் கூடாது எனக்கூறி வெளியே செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதற்கு ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் சதீஸை கத்தியைக் கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். 

ALSO READ | கலப்பட டீசல் புகார் பயோடீசல் நிறுவனத்தில் போலீசார் சோதனை

மேலும், பேக்கரியில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்திய அவர்கள், அங்கிருந்து ஓடிச்சென்றனர். இந்த சம்பவத்தில் படுகாயமைடைந்த கடை ஊழியர் சதீஷ் சிகிச்சைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதே இளைஞர்கள் வெல்டிங் பட்டறை ஒன்றில் வேலை செய்யும் ஊழியர்களையும் வெட்டியுள்ளனர்.

ALSO READ | குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து; முதியவர் பலி, ரௌடி கைது

சோனையா கோவிலில் உள்ள வெல்டிங் பட்டறைக்கு சென்ற அவர்கள், அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த பாலமுருகன் மற்றும் மாரிமுத்து ஆகியோரை கத்தியைக் கொண்டு தாக்கியுள்ளனர். அவர்களும் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் சிவகங்கை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பேக்கரியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றியுள்ள காவல்துறையினர், தலைமறைவாக இருக்கும் இளைஞர்களை தேடி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News