கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இப்தார் நோன்பு திறப்பு மற்றும் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பள்ளியின் தாளாளரும், தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் சங்க மாநில துணை தலைவர் பி.வி.பி முத்துக்குமார் தலைமையேற்று அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்களை கூறி சிறப்பு உரையாற்றினார்.
ஏழை எளியோர் எல்லோருக்கும் உணவளிக்கும் சிறப்பான பண்டிகை
நவாப் ஜாமீ ஆ மஸ்ஜித் பள்ளி வாசலின் தலைவர் முகமத் முஸ்தபா, பொருளாளர் சோழன் சம்சுதீன், செயலாளர் சிட்டி சம்சுதீன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் சபியுல்லா மண்பா, சேட்டு, அன்சர் அலி உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.புனித ரமலான் பண்டிகையானது பிறை பார்த்து நோன் பிருந்து, இறைவனை வேண்டி சிறப்பு தொழுகை நடத்தி, இப்தார் நோன்பு திறப்பு செய்து, நாமும் உணவருந்தி ஏழை எளியோர் எல்லோருக்கும் உணவளிக்கும் சிறப்பான பண்டிகை ஆகும் என விளக்கவுரையாற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏராளமான இஸ்லாமியர்கள்
சிறப்பு ரமலான் தொழுகை நடத்தப்பட்டு நோன்பு திறந்து அனைத்து நபர்களுக்கும் விருந்து தரப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமிய தாய்மார்களும் குழந்தைகளும் பெரியோர்களும் கலந்து கொண்டனர். இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான் மாத நோன்பாகும். அதனடிப்படையில் ரமலான் மாதத்தில் அதிகாலை முதல் மாலை வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் இஸ்லாமியர்கள் நோன்பினை கடைபிடிப்பார்கள்.
ரமலான் மாதம் முதல்நாள் தொடங்கி தொடர்ச்சியாக 30 நாட்களும் நோன்பினை கடைபிடிக்கும் இஸ்லாமியர்கள் மற்றொரு கடமையான ஏழை எளியோருக்கு ஜகாத் என்னும் உதவிகளை வழங்கிவருவார்கள். ரமலான் 30 நாள் நோன்பு முடிவடைந்த பின்னர் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் ரமலான் பண்டிகையாக கொண்டாடுவர்.
பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
இதற்காக அதிகாலையில் தொழுகை முடித்த பின்னர் புத்தாடை அணிந்து ஈதுல் பித்ர் என்னும் பெருநாள் சிறப்பு தொழுகையில் கலந்துகொள்வர்.
பெருநாள் சிறப்பு தொழுகையை திறந்தவெளி திடல்களில் தொழுவது கூடுதல் சிறப்பு என்பதால் பல்வேறு பகுதிகளில் திடல்களிலும், பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெறும்.தொழுகைக்கு செல்வதற்கு முன்பாக ஏதாவது ஒரு ஏழைக்கு உதவி செய்ய வேண்டும் அடிப்படையில் பத்து என்னும் உதவியை வழங்கிவிட்டு தொழுகையில் ஈடுபடுவர்.
ரம்ஜான் பண்டிகை
தமிழகத்தில் நேற்றிரவு பிறை தென்படாத நிலையில் 11 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு் தலைமை ஹாஜி அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் தவ்ஹீத்ஜமாத் மற்றும் JAQH அமைப்பின் சார்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ