ஆன்லைன் மருத்து விற்பனைக்கு இடைக்கால தடை -உயர்நீதிமன்றம்!

ஆன்லைன் மருத்து விற்பனைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Last Updated : Oct 31, 2018, 01:36 PM IST
ஆன்லைன் மருத்து விற்பனைக்கு இடைக்கால தடை -உயர்நீதிமன்றம்! title=

ஆன்லைன் மருத்து விற்பனைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் அதிகரித்து வரும் ஆன்லைன் மருந்து விற்பனையினை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. 

இந்த மனுவில்... ஆன்லைன் மருந்து விற்பனை மூலம் சில்லறை வியாபாரம் பாதிக்கப்படுகிறது. மேலும், பதிவு செய்யப்படாத கடைகள் மூலம் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. எனவே காலாவதியான, போலியான மருந்துகள் மக்களை சென்றடையும் ஆபத்துள்ளது, மருத்துவர்கள் அளிக்கும் மருந்து சீட்டில்லாமல் விதிமீறி மருந்துகள் ஆன்லைனில் விற்கப்படுகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவினை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி., ஆன்லைன் மூலம் மருந்து விற்க இரண்டு வாரம் இடைக்கால தடைவிதிதுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக வரும் 20-ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது!

ஏன் ஆன்லைன் மருந்து விற்பனை கூடாது... (மருந்து வணிகர்கள் சங்க சென்னை மாவட்ட தலைவர் செல்வகுமார் பார்வையில்)

வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஆன்லைன் மருந்து விற்பனை நடைமுறையில் உள்ளது. அதற்கான கட்டமைப்பு அந்நாடுகளில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அதற்கான கட்டமைப்பு வசதி இல்லை.

ஆன்லைன் விற்பனை மூலம் கார்பரேட் நிறுவனங்களை மத்திய அரசு ஊக்கப்படுத்தும் வகையில், பாதிப்படைவது அப்பாவி மக்கள் தான்... மருந்து தயாரிப்பில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஏதாவது தவறு இருப்பது கண்டு பிடிக்காவிட்டால் அதனை மொத்த வினியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள் மூலம் திரும்ப பெற முடியும். ஆனால் ஆன்லைன் விற்பனையில் ஒருமுறை விற்ற மருந்தை திரும்ப பெற முடியாது. 

மருந்து கட்டுப்பாடு சட்டங்களை ஆன்லைன் விற்பனையாளர்களால் பின்பற்ற முடியாது. இது முற்றிலும் மருந்து கட்டுப்பாடு சட்டத்துக்கு எதிரானது.

Trending News