இபிஎஸ் மீதான புகார்... திமுக மனு அதிரடி தள்ளுபடி - நீதிபதி தீர்ப்பில் சொன்னது என்ன?

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க கோரி திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jul 18, 2023, 01:47 PM IST
  • இந்த வழக்கு 2018ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
  • ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை விஜிலென்ஸ் ஆணையர் ஏற்கவில்லை.
  • இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இபிஎஸ் மீதான புகார்... திமுக மனு அதிரடி தள்ளுபடி - நீதிபதி தீர்ப்பில் சொன்னது என்ன? title=

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அளித்த புகார் மீது சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தும்படி, 2018ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

மீண்டும் விசாரணை 

அதன்படி இந்த மனுவை  நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில், "ஏற்கனவே தாக்கல் செய்யபட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது" என  வாதிடப்பட்டது.

மேலும் படிக்க | "சொத்து சேர்க்க வேண்டும் என்பதே திமுக அமைச்சர்களின் எண்ணம்!"

இபிஎஸ் தரப்பு

ஊழல் கண்காணிப்பு ஆணையர் என்பவர் விசாரணை அதிகாரி இல்லை என்றும், லஞ்ச ஒழிப்பு துறை அளிக்கும் அறிக்கைக்கு  ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் மட்டுமே அவருக்கு உள்ளது என விளக்கமளிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தி, புகாருக்கு எதிர்மறையான அறிக்கையை அளித்த பிறகு, அதை ஆராய தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், பொது ஊழியருக்கு எதிரான குற்றச்சாட்டுடன் புகார் வந்தால் அதை விசாரிக்க ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையின் அறிக்கையை ஏற்கவும், நிராகரிக்கவும் ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு அதிகாரம் உள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. 

இன்று தீர்ப்பு 

எடப்பாடி பழனிச்சாமி மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை என கடந்த 2018ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை  விஜிலென்ஸ் ஆணையர் ஏற்கவில்லை என்றும், மீண்டும் புதிதாக விசாரணை நடத்த அனுமதித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

ஆர்.எஸ்.பாரதி தரப்பில், விசாரணையில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக வழக்கை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பில், 2018ல் செய்த ஆரம்பகட்ட விசாரணையின் முடிவில், மூடிமுத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்த அறிக்கையை ஆய்வு செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

ஆரம்பகட்ட விசாரணை அவசியமில்லை

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் உத்தரவு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கடந்த 2018ஆம் ஆண்டு நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை அறிக்கையில் குறைகாண முடியாது எனவும், அதில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனக் கூறி, சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து விசாரிக்க கோரிய ஆர்.எஸ்.பாரதியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் ஆட்சி மாற்றம் காரணமாக புகார் மீது மீண்டும் ஆரம்பகட்ட விசாரணை நடத்த அவசியமில்லை என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | அமைச்சர் பொன்முடியிடம் விடிய விடிய விசாரணை... இன்று மீண்டும் ஆஜர் - இதுவரை நடந்தது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News