நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஒபிஎஸ், இபிஎஸ் பதிலளிக்க சென்னை நீதிமன்றம் உத்தரவு

அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் ஒ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகியோர் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : Jun 30, 2022, 07:46 PM IST
  • சூரியமூர்த்தி என்பவர் 23வது உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
  • கட்சி விதிகளுக்கு உட்பட்டு தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஒபிஎஸ், இபிஎஸ் பதிலளிக்க சென்னை  நீதிமன்றம் உத்தரவு title=

அதிமுக-வின் அடிமட்ட தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படும் வகையில் இருந்த அதிகாரமிக்க பொதுச் செயலாளர் பதவியை கலைத்துவிட்டு, முறையாக தேர்தல் நடைமுறைகளை கையாளாமல் நடத்தப்பட்ட உட்கட்சி தேர்தலை எதிர்த்து திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் 23வது உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டதே விதிமீறல் என்பதால், அதன்மூலம் தேர்வான ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தேர்வு செல்லாது என்று அறிவித்து, கட்சி விதிகளுக்கு உட்பட்டு தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

மேலும் படிக்க | New Wage Code:1 ஜூலை முதல் சம்பளம், வார விடுமுறை என அனைத்திலும் மாற்றம் 

இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், ஜூன் 23ல் பொதுக்குழுக் கூட்டம் நடத்த தடை விதிக்கக் கோரிய கூடுதல் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பின்னர் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், ஜூலை 11ஆம் தேதி அடுத்த பொதுக்குழு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

கட்சி நிர்வாகிகள் தேர்தலை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலும், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவும் அடுத்த பொதுக்குழு கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அக்கூட்டத்தை நடத்த ஒ.பி எஸ்., இ.பி.எஸ். ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டுமென புதிதாக கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி தாமோதரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஒ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 4ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

சூரியமூர்த்தி தாக்கல் செய்துள்ள இந்த கூடுதல் மனுவில் ஒ.பி.எஸ்.-ஐ முன்னாள் பொருளாளர் என்றும், இ.பி.எஸ்.- ஐ மாவட்ட முன்னாள் செயலாளர் என்றும் எதிர்மனுதாரர் பட்டியலில் சேர்த்துள்ளார்.

மேலும் படிக்க | New Wage Code: ஜூலை 1 முதல் புதிய சட்டம் அமல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News