நாட்டில் கொரோனாவின் கோரத் தாண்டவம் இன்னும் ஓயவில்லை. நோய்த்தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக அரசு லாக்டவுன், ஊரடங்கு என கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
நோய்த்தொற்றை கட்டுப்படுத்த போடப்படும் கட்டுப்பாடுகள், தினசரி வேலை பார்த்து பசியாற்றும் கோடிக்கணக்கான தொழிலாளர்களையும், ஏழை மக்களையும் பட்டினியால் வாடச் செய்கிறது.
பலரும் இந்த கொரோனா கொடுந்தொற்று காலத்தில் உதவிகளை செய்கின்றனர்.
பலர் உதவிகளை ஏற்றுக் கொண்டாலும், சிலர் பட்டினியாக கிடந்தாலும் பரவாயில்லை, யாரிடமும் உதவி கேட்கக்கூடாது என்று பசியில் வாடுவார்கள். இதுபோன்றவர்களின் மனவோட்டத்தைப் புரிந்துக் கொண்டு அன்பு சுவர் என்ற அமைப்பு செய்யும் உதவியும் அவர்களின் மனிதாபிமானம் கலந்த் அன்பும் அனைவரையும் நெகிழச் செய்கிறது.
Also Read | மம்தா பேனர்ஜியின் தம்பி கொரோனாவுக்கு பலி
கும்பகோணத்தில் இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து அன்பு சுவர் என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் உணவு சமைத்து பொட்டலமாக ரெடி செய்து ஒரு இடத்தில் வைத்து விடுகின்றனர். யார் கொடுப்பவர், பெற்றுக் கொள்பவர் யார் என்பது யாருக்குமே தெரியாது.
உணவு தேவைப்படுபவர்கள் தாங்களாக போய் தங்களுக்கு தேவையான அளவு உணவை எடுத்து கொள்ளலாம். இளைஞர்கள் செய்துள்ள இந்த ஏற்பாட்டிற்கு பெரும் வரவேற்ப்பு கிடைத்துள்ளது.
கொரோனா பரவலால் லாக்டவுன் அமலில் உள்ளது. வசதியற்ற ஏழை மக்கள் உணவின்றி தவித்தனர். வேலையிழந்த பலரும் வருமானம் இல்லாமல் உணவுக்கு வழியில்லாமல் தவித்ததைப் பார்த்த இளைஞர்கள், உணவை
யார் கொடுக்கிறார்கள் என்பது பயனாளிகளுக்கு தெரியாத வகையில் ஏற்பாட்டை செய்ய நினைத்து அன்பு சுவர் என்ற அமைப்பை தொடங்கினார்கள்.
Also Read | கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 326,098 பேருக்கு கொரோனா உறுதி
தயிர் சாதம், தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம் என 100 பேருக்கு தேவையான உணவை தினசரி சமைத்து, அவற்றை பொட்டலங்களாக தயார் செய்து சாரங்கபாணி கோயில் சன்னதி தெருவில் உள்ள கணிதமேதை ராமானுஜன் நினைவிடம் அருகே, மரச் சட்டகம் ஒன்றில் வைத்து விடுகிறார்கள். உணவுடன் தண்ணீர் பாட்டிலையும் இந்த அன்பு இளைஞர்கள் வைத்து விட்டு சென்று விடுகின்றனர். இளைஞர்களின் இந்த முயற்சி அனைவராலும் பாராட்டப்படுகிறது.
அன்பை விதைத்தால் அன்பு அறுவடையாகும், மனிதம் வளரும், கொரோனா போன்ற கொடிய வைரஸை முறியடிக்க அன்பு என்ற ஆயுதத்தை கையில் எடுத்திருக்கும் இளைஞர்களுக்கு பாராட்டுக்கள்…
புதிய பொருட்கள் வாங்கியதும், பயன்படுத்திய பழைய பொருட்களை என்ன செய்வது என்று தெரியாமல் சிலர் அப்படியே போட்டு வைப்பார்கள். சிலர் குப்பைக்கோ அல்லது பழைய பொருட்கள் கடையிலோ போட்டு விடுவார்கள்.
Also Read | இயக்குநர் ஷங்கர் திரைப்படங்களை இயக்க தடை விதிக்க வேண்டும்
இந்த பொருட்களை பொருட்கள் தேவைப்படுத்துவோருக்கு கொடுக்கும் வகையில் அன்பு சுவர் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, பொருட்கள் இருப்பவர்கள், அவற்றைக் கொண்டுவந்து, அன்பு சுவரில் வைத்து விட்டு போய்விடுவார்கள். தேவைப்படுபவர்கள் வந்து எடுத்துச் செல்வார்கள். கொடுப்பது யார், பெறுவது யார் என்பது தெரியாமல் உதவி செய்யும் திட்டம் இது.
சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்னதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் தந்தூரி, அலுவலக வாயிலில் துவங்கி வைத்தார். அந்தத் திட்டத்தின் பெயர் அன்பு சுவர்.
Also Read | கொரோனா நோயாளிகளுக்கு ஆலய அன்னதான திட்டம் விரிவாக்கம்
இந்த அன்பு சுவர் மையத்தில் பயன்படுத்திய ஆடைகள், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள், காலணிகள், புத்தகங்கள், பொம்மைகள் உள்ளிட்ட பயனுள்ள பொருட்களை பொதுமக்கள் வைக்கலாம். அதை தங்களுக்கு பயன்படும் பொது மக்கள் எடுத்து செல்லலாம்.
இந்தத் திட்டத்தின் அடிப்படை குறிக்கேளை எடுத்துக் கொண்டு கும்பகோணம் இளைஞர்கள் கொரோனா காலத்தில் உணவு வழங்குகின்றனர்.
Also Read | உருவானது ‘டவ் தே’ புயல்; தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR