இன்று லாரி உரிமையாளர்கள் 'ஸ்டிரைக்'!!

Last Updated : Oct 9, 2017, 08:53 AM IST
இன்று லாரி உரிமையாளர்கள் 'ஸ்டிரைக்'!! title=

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, லாரி உரிமையாளர்கள் இன்று முதல் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தை துவங்குகிறது. வெளி மாநிலங்கள் செல்லும் லாரிகள், நேற்று முதல் நிறுத்தப்பட்டன. 

நாடு முழுவதும், மொத்தம் 93 லட்சம் லாரிகள் நிறுத்தப்படுவதால், தீபாவளி சமயத்தில் தேவையான பொருட்கள் விலை உயரும் அபாயம் உருவாகியுள்ளது.

நாட்டில், லாரிகள் வாங்கும் போதும், விற்கும் போதும், 28 சதவீதம், ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. இதனால், லாரி தொழிலில் நஷ்டம் ஏற்படுகிறது. இதை, ஒரு முனை வரியாக்க வேண்டும். உரிமம் வாங்கும் போதே, ஓராண்டுக்கான சுங்க கட்டணத்தை வசூலிக்க வேண்டும். 

பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயிக்காமல், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நிர்ணயிக்க வேண்டும் என, லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதை வலியுறித்தி தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் லாரிகள், நேற்று முதல் இயக்கப்படவில்லை.

தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் மட்டும் இருக்கும் நிலையில் வேலைநிறுத்தம் நடப்பதால், காய்கறி, பழம், உணவுப் பொருட்கள், பண்டிகை கால பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளது.

Trending News