கொள்ளையடிப்பதும், ஊழல் செய்வதும் தான் இண்டி கூட்டணி நோக்கம்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

Union Minister L Murugan About INDIA Alliance :நான் ஒரு சாதாரண தொண்டன். கட்சி கட்டளை என்னவாக இருக்குமோ, அதை நிறைவேற்றுவது தான் சாதாரண தொண்டனின் கடமை, பணி. கட்சி சொன்னால் போட்டியிடுவேன் என்று எல்.முருகன் கூறியுள்ளார்.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Mar 18, 2024, 04:00 PM IST
  • 2 ஜி ஊழல் வழக்கில் மிக விரைவில் தீர்ப்பு வரும்.
  • கட்சி கட்டளையிட்டால் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவேன் - எல்.முருகன்.
கொள்ளையடிப்பதும், ஊழல் செய்வதும் தான் இண்டி கூட்டணி நோக்கம்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி title=

Union Minister L Murugan About INDIA Alliance : கொள்ளையடிப்பதும், ஊழல் செய்வதும் தான் இண்டி கூட்டணி நோக்கம் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி அளித்திருந்தார். கோவை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், 

கோவையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பிரமாண்டமான ரோடு ஷோ பொதுமக்கள் ஆதரவு உடன் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி கடந்த ஒரு வார காலமாக தென் இந்தியாவை மையமாக வைத்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நாளை சேலத்தில் நடைபெறும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்க உள்ளார். தென்னிந்தியாவில் முழுமையாக பிரதமர் மோடி தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இது பாஜகவினர் மேலும் மிகப்பெரிய ஊக்கம் அளிக்கும் வகையிலும், தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக பிரதமர் மோடி சிறந்த நல்லாட்சியை தந்துள்ளார். 

நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதே அவரது எண்ணம். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க திட்டமிட்டு பணியாற்றி வருகிறார். இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என பிரதமர் உழைத்துக் கொண்டுள்ளார். 

மேலும் படிக்க | பாஜக பற்றி அறிக்கைவிட பழனிசாமிக்கு முதுகெலும்பு இல்லையா? டிஆர்பாலு சரமாரி கேள்வி!

தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் பாஜகவிற்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். தேசத்திற்கு எதிரானவர் யார் என்பது மக்களுக்கு தெரியும். நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்வது யார் என்பதும் மக்களுக்கு தெரியும். கொள்ளையடிப்பதும், ஊழல் செய்வதும் தான் இண்டி கூட்டணி நோக்கம். நாட்டின் வளர்ச்சி தான் பாஜக இலக்கு. 2 ஜி ஊழல் வழக்கில் மிக விரைவில் தீர்ப்பு வரும். யாரையும் மிரட்டி தேர்தல் பத்திர நிதி வாங்கவில்லை. திமுக, காங்கிரஸ் அப்படி தான் தேர்தல் பத்திர நிதி வாங்கினார்களா? தாங்களாக முன்வந்து தேர்தல் பத்திர நிதியை தந்துள்ளார்கள். 

மாநிலத்தில் அதிக நிதி தேர்தல் பத்திரம் மூலம் வாங்கியது திமுக தான். என்ன ஊழல் செய்து அந்த நிதியை வாங்கினார்கள்? 2 ஜியில் ஆகாயத்தில் ஊழல் செய்தது ஆ.ராசா. அதனால் பயன்பட்டது திமுக குடும்பம். ஊழல் பற்றி பேச எந்த அருகதையும் திமுகவிற்கு கிடையாது. பிரதமர் மோடி ஊழலற்ற நிர்வாகத்தை தந்து வருகிறார்கள். 

பாஜக அமைச்சர்கள் மீதோ, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதோ சிறிய புகார்கள் இல்லை. தேர்தல் பத்திர நிதி விபரங்களை கட்சி தலைமை வெளியிடும். பொன்முடியை உச்சநீதிமன்றம் குற்றமற்றவர் என சொல்லவில்லை. அதனால் தான் ஆளுநர் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

நீலகிரி தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, “நான் ஒரு சாதாரண தொண்டன். கட்சி கட்டளை என்னவாக இருக்குமோ, அதை நிறைவேற்றுவது தான் சாதாரண தொண்டனின் கடமை, பணி கட்சி சொன்னால் போட்டியிடுவேன். 

நீலகிரி தொகுதி மட்டுமின்றி அனைத்து மக்களுக்கும் நிதி ஒதுக்கி மக்கள் பணிகளை செய்து வருகிறேன்” எனப் பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், “ராகுல்காந்தி, ஸ்டாலின் தோல்வியின் விழும்பில் இருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் 400 க்கும் மேற்பட்ட தொகுதிகளை வென்று மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சியமைப்பார். 

கூட்டணி இன்னும் இரண்டு மூன்று நாட்கள் உறுதியாகும். கோவை பாஜக கோட்டையாக உள்ளது.இத்தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியிடுவது உறுதி என தெரிவித்தார்.

மேலும் படிக்க | பொன்முடியின் அமைச்சர் கனவு தகர்ந்ததா...? பதவிப் பிரமாணம் செய்ய ஆளுநர் மறுப்பு - காரணம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News