மக்களவை தேர்தல்; 8 தொகுதிகளில் திமுக-அதிமுக நேரடிப்போட்டி!

மக்களவை தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பங்கீடு குறித்த இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது!

Last Updated : Mar 17, 2019, 10:49 AM IST
மக்களவை தேர்தல்; 8 தொகுதிகளில் திமுக-அதிமுக நேரடிப்போட்டி! title=

மக்களவை தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பங்கீடு குறித்த இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது!

தொகுதி பங்கீடு அறிவிப்பு வெளியிடுவதற்காக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக நிர்வாகிகள், பா.ஜ., நிர்வாகிகள் உள்ளிட்டோர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வந்துள்ளனர். இச்சந்திப்பிற்கு பின்னர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொகுதி பங்கீடு இறுதி பட்டியலை வெளியிட்டார்.

இன்று வெளியிடப்பட்ட தொகுதி பங்கீடு பட்டியலின் படி அதிமுக-20 தொகுதிகளில் போட்டியிடுகிறது...

---அதிமுக - 20 தொகுதி---
1,தென்சென்னை, 
2, காஞ்சீபுரம் (தனி), 
3, திருவண்ணாமலை (தனி), 
4, சேலம், 
5, நாமக்கல், 
6, ஈரோடு, 
7, திருப்பூர், 
8, நீலகிரி (தனி), 
9, பொள்ளாச்சி, 
10, கிருஷ்ணகிரி, 
11, ஆரணி,
12, கரூர், 
13, பெரம்பலூர், 
14, சிதம்பரம் (தனி), 
15, நாகப்பட்டினம் (தனி), 
16, மயிலாடுதுறை, 
17, மதுரை, 
18, தேனி, 
19, திருவள்ளூர் 
20, திருநெல்வேலி.

---பாமக-7---

21, மத்திய சென்னை, 
22, ஸ்ரீபெரும்புதூர், 
23, அரக்கோணம், 
24, தர்மபுரி, 
25, திண்டுக்கல்,
26, விழுப்புரம் (தனி), 
27, கடலூர்.

---பாஜக-5---

28, கோயம்புத்தூர், 
29, சிவகங்கை, 
30, ராமநாதபுரம், 
31, தூத்துக்குடி, 
32, கன்னியாகுமரி

---தேமுதிக-4---

33, வடசென்னை, 
34, கள்ளக்குறிச்சி, 
35, திருச்சி, 
36, விருதுநகர்.

---என்.ஆர்.காங்கிரஸ் - 1---

37, புதுச்சேரி.

---த.மா.கா-1---

38, தஞ்சாவூர்

---புதிய தமிழகம் - 1---

39, தென்காசி.

---புதிய நீதிக்கட்சி - 1 ---

40, வேலூர்.

முன்னதாக திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு பட்டியல் வெளியான நிலையில், 8 தொகுதிகளில் திமுக-அதிமுக நேரடிப்போட்டி காண்கிறது.

அதன்படி தென்சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், நீலகிரி, பொள்ளாச்சி, மயிலாடுதுறை, நெல்லை தொகுதிகளில் திமுக-அதிமுக நேரடியாக மோதுகிறது.

வேட்பாளர் குறித்த அறிவிப்பு இன்றைய நேர்காணலுக்கு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

Trending News