எங்களுக்கு கிடைத்திருக்கும் ஆதரவை பார்த்து திமுக-வின் தூக்கம் தொலைந்துவிட்டது -பிரதமர் மோடி

Narendra Modi In Tamil Nadu: சேலம் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, தேர்தல் நாளில் மக்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் பாஜக கூட்டணிக்கு தான் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர். எனவே நமது வெற்றி இலக்கு 400-ஐ தாண்டுவதே என்றார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 19, 2024, 04:05 PM IST
எங்களுக்கு கிடைத்திருக்கும் ஆதரவை பார்த்து திமுக-வின் தூக்கம் தொலைந்துவிட்டது -பிரதமர் மோடி title=

Narendra Modi Speech in Salem: நேற்று கோவைவை தொடர்ந்து, இன்று சேலத்தில் நடைபெறும் பொதுக்கூடத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக்கொண்டார். சேலம் வந்த நரேந்திர மோடிக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் சேலம் பொதுக்கூட்ட மேடையில் கூட்டணி தலைவர்களும் அமர்ந்திருந்தனர். 

சேலம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உடன் ஓபிஎஸ், ராமதாஸ், பாரிவேந்தர், ஏசி சண்முகம், அன்புமணி ராமதாஸ், டி.டி.வி.தினகரன், சரத்குமார், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  அதேபோல பாஜக சார்பில் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், குஷ்பு, சரத் குமார் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் கலந்துக் கொண்டார்.

மேலும் படிக்க - ’தேசநலன் கருதி’ பாமக எடுத்த கூட்டணி முடிவு - பாஜகவுடன் சேரப்போகிறது! அதிமுக ஏமாற்றம்

சேலம் பிரதமர் மோடி ஆற்றிய உரையின் முக்கியம்சம்

அப்பொழுது உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பாரத அன்னை வாழ்க' என தமிழில் தனது உரையைத் தொடங்கினார். 

சேலம் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், எனக்கும் பாஜகவிற்கும் கிடைத்திருக்கும் ஆதரவால் திமுக-வின் துக்கம் தொலைந்துவிட்டது என்றார். 

ராமதாஸின் அனுபவமும், அன்புமணியின் திறமையும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகம் அளிக்கும் என்றார் பிரதமர் மோடி.

தேர்தல் நாளில் மக்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் பாஜக கூட்டணிக்கு தான் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர். எனவே நமது வெற்றி இலக்கு 400-ஐ தாண்டுவதே என்றார் பிரதமர் மோடி.

மேலும் படிக்க - பிரதமர் மோடி அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News