Lok Sabha Election 2024 : திமுகவில் 50 சதவீதம் புதுமுக வேட்பாளர்கள்! யார் எந்த தொகுதியில் போட்டி?

Lok Sabha Election 2024 DMK Candidates List :மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி, இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்திருக்கிறார்.   

Written by - Yuvashree | Last Updated : Mar 20, 2024, 02:54 PM IST
  • 2024 சட்டமன்ற தேர்தல் திமுக வேட்பாளர்கள் பட்டியல்
  • யார் எந்த தொகுதியில் போட்டி?
  • தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
Lok Sabha Election 2024 : திமுகவில் 50 சதவீதம் புதுமுக வேட்பாளர்கள்! யார் எந்த தொகுதியில் போட்டி? title=

Lok Sabha Election 2024 DMK Candidates List : மக்களவை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளதை ஒட்டி, தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது கட்சியை சேர்ந்த தொகுதி வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. இன்று ஒரே நாளில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களது தேர்தல் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. திமுக கட்சியில் 50 சதவிகிதம் புதுமுக வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட உள்ளனர். அவர்கள் யார் யார்? முழு விவரத்தை இங்கு பார்ப்போம். 

தேர்தல் அறிக்கை:

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தமாக 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல், வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி அறிவிக்கப்ப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையொட்டி, தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள் அனைத்தும் பரபரப்பாக செயல்பட்டு, தங்கள் தொகுதிக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள், 27ஆம் தேதி என்றும், வேட்புமனுக்கள் பரீசீலனை செய்யப்படும் நாள், 28ஆம் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக, தமிழகத்தில் 21 தொகுதிகளில் போட்டியிட இருக்கிறது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியலை மு.கஸ்டாலின் இன்று அறிவித்திருக்கிறார். 

மேலும் படிக்க | தேமுதிகவுக்கு 5 தொகுதிகள்...? அதிமுக கூட்டணி பங்கீடு - பரபரப்பாகும் தேர்தல் களம்!

வேட்பாளர்களின் பட்டியல்:

1. வட சென்னை - டாக்டர் கலாநீதி வீராசாமி

2. தென் சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன்

3. மத்திய சென்னை - தயாநிதி மாறன்

4. ஸ்ரீபெரம்பதூர் - டி.ஆர்.பாலு

5. அரக்கோணம் -ஜெகத்ரட்சகன்

5. வேலூர் - கதிர் ஆனந்த்

6. தருமபுரி - ஆ. மணி

7.  தி.மலை - சி.என்.அண்ணாதுரை

8. ஆரணி - எம்.எஸ்.தரணிவேந்தன்

9. கள்ளக்குறிச்சி - மலையரசன்

10. சேலம் - செல்வகணபதி

11. ஈரோடு - பிரகாஷ்

12. நீலகிரி - ஆ.ராசா

13. கோவை - கணபதி ராஜ்குமார்

14. பொள்ளாச்சி - ஈஸ்வரசாமி

15. பெரம்பலூர் - அருண் நேரு

16. தஞ்சை - ச.முரசொலி

17. தேனி - தங்க தமிழ்ச்செல்வன்

18. தூத்துக்குடி - கனிமொழி

19. தென்காசி - ராணி

20.திருவண்ணாமலை-சி.என்.அண்ணாதுரை

21.காஞ்சிபுரம்-க.செல்வம்

இந்த வேட்பாளர்கள் பட்டியலில் புதியவர்கள் 11 பேர், பட்டதாரிகள் 3 பேர், முது நிலை பட்டதாரிகள் 3 பேர், வழக்கறிஞர்கள் 6 பேர் என புதுமுக வேட்பாளர்கள் பலர் களமிறங்க உள்ளனர். 

தேர்தல் அறிக்கை வெளியீடு:

தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பாக, ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து ஆளுநர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், அவர் மாநிலங்கள் சுயாட்சி பெறும் வகையில் இந்திய அரசிலமைப்பு சட்டம் திருத்தப்படும் என்றும், ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் பிரிவு 261 நீக்கப்படும் என்றும் தெரிவித்தார். வீட்டு உபயோக சிலிண்டர் விலை, ரூ.500 ஆக குறைக்கப்படும் என்றும், இலங்கை ஈழ தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு, நாடு முழுவதும் காலை உணவு திட்டம் வழங்கப்படும் என்றும் மு.கஸ்டாலின் அறிவித்துள்ளார். 

மேலும் படிக்க | 16 வேட்பாளர்களை அறிவித்த அதிமுக... புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு - இபிஎஸ் பிளான் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News