வரும் 2019 மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டதில் இறுதி முடிவு செய்யப்பட்டது. திமுக கூட்டணியில் மொத்தம் எட்டு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதில் மதிமுக, விசிக, கொங்குநாடு, முஸ்லிம் லீக், ஐஜேகே போன்ற கட்சிகள் திமுக முத்திரையான உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடும் என தெரிகிறது. அதுக்குறித்து இறுதி முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தம் உள்ள 40 தொகுதிகள் உள்ளன. மக்களவைத் தேர்தலில் திமுக 20 தொகுதியிலும், மற்ற தோழமைக் கட்சிகளுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில், இன்று செய்தியாளா்களை சந்தித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், வருகின்ற மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் முறையாக பேச்சுவாரத்தை நடத்தி, அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவிப்பு ஓரிரு தினங்களில் வெளியாகும் எனக் கூறினார்.
21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் லோக்சபா தேர்தலுடன் இணைந்து நடத்த வேண்டும். மேலும் திமுக போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.
தேமுதிகவின் நிலைப்பாடு குறித்து கேள்வி கேட்டதற்கு, அவர்களை குறித்து பேச நான் விரும்பவில்லை என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.