நவம்பர் 17க்குள் உள்ளாட்சி தேர்தல்: ஐகோர்ட் உத்தரவு

Last Updated : Sep 4, 2017, 12:34 PM IST
நவம்பர் 17க்குள் உள்ளாட்சி தேர்தல்: ஐகோர்ட் உத்தரவு title=

நவம்பர் 17-ம் தேதிக்குள் தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட் இன்று அதிரடி உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடக்க இருந்த உள்ளாட்சி தேர்தல், திமுக-வை சேர்ந்தவர்கள் தொடர்ந்த வழக்கால் தள்ளி போனது. 

தொடர்ந்து விசாரணையில் இருந்த இந்த வழக்கில், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:

செப்டம்பர் 18-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும். மேலும் இந்த உள்ளாட்சி தேர்தலை நவம்பர் 17-ம் தேதிக்குள் நடத்த வேண்டும். வேட்பாளர்களின் குற்ற பின்னணி குறித்த தகவல்களை இணைய தளத்தில் வெளியிட வேண்டும். 

இவ்வாறு அவர் உத்தரவு அளித்துள்ளார்.

Trending News