மதுபானங்கள் விலை உயர்வு: குடிமக்களின் வருத்தம்!

Last Updated : Oct 13, 2017, 12:41 PM IST
மதுபானங்கள் விலை உயர்வு: குடிமக்களின் வருத்தம்! title=

இன்று முதல் அமலாகிறது டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வு!

டாஸ்மாக் வருவாயை அதிகரிக்க தமிழ அரசு மதுபானங்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்திருந்தது. அதன்படி டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வு இன்று முதல் அமலாகின்றது.

இதன்படி 180மி அளவுள்ள குவாட்டர் ரம், விஸ்கி, பிராந்தி போன்ற பானங்களின் விலை ரூ.12 வரை உயர்த்தப்பட்டுள்ளது. 

எனினும் இளைஞர்களை மகிழ்விக்கும் வகையினில் பீரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

தமிழகத்தில் வழக்கமான நாட்களில் விற்பனை ஆவதை விட பண்டிகை நாட்களில் மதுபானங்கள் சற்று அதிகமாகவே விற்பனை ஆகும். இந்நிலையில் தீபாவளி பண்டிகை வருவதையொட்டி அரசின் இந்த அறிவிப்பு பண்டிகை கால வசூல் வேட்டையாக அமையும் என்பதில் ஐயம் இல்லை! 

Trending News